இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ இன்று தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து விப்ரோ தற்போது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டிசம்பர் காலாண்டில் விப்ரோ கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 2.8 சதவீத அதிக ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பெற்றுள்ளது. அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 3,053 கோடி ரூபாய் மொத்த நிகர லாபமாகப் பெற்றுள்ளது.
விப்ரோ வருவாய்
இக்காலாண்டில் ஒருங்கிணைந்த வருவாய் அளவு 14.3 சதவீதம் அதிகரித்து 23,229 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் 2023 ஆம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஐடி சேவை வர்த்தகத்தின் வருவாய் வளர்ச்சி நிலையான நாணய அடிப்படையில் 11.5 - 12.0 சதவீதம் வரையில் உயரும் என விப்ரோ கணித்துள்ளது.
ஐடி சேவை வருவாய்
மேலும் டிசம்பர் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஐடி சேவை மூலம் கிடைக்கு வருவாய் 10.4 சதவீதம் அதிகரித்து உள்ளது, மேலும் ஆப்ரேட்டிங் மார்ஜின் EBIT அளவு 120 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 16.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
4.3 பில்லியன் டாலர் டீல்
இக்காலாண்டில் விப்ரோ நிறுவனம் சுமார் 4.3 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகம், மேலும் லார்ஜ் டீல் பிரிவில் விப்ரோ பெற்ற டீல் மதிப்பு 69 சதவீதம் அதிகமாகும்.
4வது காலாண்டு
அனைத்து விஷயங்களைக் காட்டிலும் தொடர்ந்து 4வது காலாண்டாக விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் குறைந்து வருகிறது. இதன் மூலம் இக்காலாண்டில் விப்ரோ-வின் அட்ரிஷன் விகிதம் 180 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது, அதாவது 1.80 சதவீதம் குறைந்து 21.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா
விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் அமெரிக்கா 1 பிரிவு 29.4 சதவீதமும், அமெரிக்கா 2 பிரிவு வர்த்தகம் 30.8 சதவீதமும், ஐரோப்பிய சந்தை 28.8 சதவீதமும் வருவாய் பங்கீட்டை கொண்டு உள்ளது. விப்ரோ தனது டாப் 10 வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் டிசம்பர் காலாண்டில் 14.7 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
ஈவுத்தொகை
விப்ரோ நிறுவனம் டிசம்பர் காலாண்டு முடிவில் அனைத்து பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 1 ரூபாய் ஈவுத்தொகையை நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications