மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு முடிவுகளை இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ வியாழக்கிழமை வெளியிட்டு உள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் காலாண்டு முடிவுகளை பார்த்த நிலையில் ஐடி ஊழியர்களும், ஐடி நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தது விப்ரோவின் காலாண்டு முடிவுகளுக்கு தான்.
விப்ரோ மார்ச் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 3,074 கோடி ரூபாயை பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் 0.4% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் விப்ரோ நிறுவனம் 3,087 கோடி ரூபாயை லாபமாக பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து மார்ச் காலாண்டில் விப்ரோ நிறுவனம் தனது ஆப்ரேஷன்ஸ் மூலம் கிடைத்த வருவாய் அளவு கடந்த ஆண்டை காட்டிலும் 11 சதவீதம் அதிகரித்து 23,190 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் இக்காலாண்டில் செலவுகள் அதிகமான காரணத்தால் லாப அளவுகள் 0.4 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும் பங்கு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக நடந்த விப்ரோ நிர்வாக குழு கூட்டத்தில் விப்ரோ சந்சையில் இருக்கும் தனது பங்குகளை ஒரு பங்கிற்கு 445 ரூபாய் என்ற விலையில் பைபேக் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பைபேக் திட்டம் சுமார் 12000 கோடி ரூபாய் வரையில் செய்யும் என்றும், ஆனால் இந்த அளவை கட்டாயம் தாண்டாது எனவும் தெரிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் இந்த பைபேக் திட்டத்தில் தனது பங்குதாரர்களிடமிருந்து சுமார் 26.9 கோடி பங்குகளை ரூ.12,000 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது.
மார்ச் காலாண்டு முடிவில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த புக் வேல்யூ அதாவது ப்ராஜெக்ட் பெற்ற அளவீடு ஒரு வருடத்தில் 29 சதவீதம் அதிகரித்து 4.1 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் பெரிய ஒப்பந்த பிரிவின் அளவு 155 சதவீதம் அதிகரித்து 1.1 பில்லியன் டாலராக உள்ளது.
இதுக்குறித்து விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்டே கூறுகையில் 2023 ஆம் நிதியாண்டின் முடிவில் எப்போதும் இல்லாத வகையில் வலிமையான புக் ரெக்காட் உடன் முடித்துள்ளோம். இதன் மூலம் சந்தையில் எங்களுடைய நிலையும், புதிய வர்த்தகத்தை பெறும் வேகத்திலும் சிறப்பான மாற்றம் உருவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.
மேலும் மார்ச் காலாண்டு முடிவில் விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 3.3 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு 19.2 சதவீதமாக இருந்த விப்ரோ வின் அட்ரிஷன் விகிதம் 14.1 சதவீதமாக குறைந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications