முன்னணி IT சேவை நிறுவனமான விப்ரோ 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடைந்த நான்காம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரூ. 3,570 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. 2024-ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட நான்காம் காலாண்டு முடிவுகளை விட தற்போது லாபம் அதிகரித்துள்ளது. 2024-ஆம் நிதியாண்டில் ரூ.3,290 கோடியாக இருந்த நிகர லாபம் இந்த முறை 26 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் விப்ரோ நிறுவனம் ரூ.22,504 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் ஜனவரி 2024 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் ரூ. 22,504 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 1 சதவீதம் அதிக லாபத்தை பதிவு செய்துள்ளது.

நான்காவது காலாண்டில் விப்ரோவின் ஐடி சேவைகள் பிரிவு ஈட்டிய மொத்த வருவாய் $2,596.5 மில்லியன். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வருவாயை பொதுவாக அமெரிக்க டாலரில் குறிப்பிடுவது வழக்கம். இந்த வருவாய் கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1.2 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த காலாண்டில் 2.3% வருவாய் விகிதம் குறைந்திருக்கிறது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் வரிக்கு பிந்தைய லாபம் 6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ரூ.3,354 கோடி லாபம் பதிவாகியுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் என்பது செலவுகள் மற்றும் வரி போக நிறுவனத்திற்கு கிடைக்கும் நிகர லாபத்தை குறிக்கிறது.
"2025-ஆம் நிதியாண்டில் 2 மிகப்பெரிய ஒப்பந்தங்களை பெற்றோம். இந்த ஒப்பந்தங்கள் நிறுவனத்திற்கு நீண்ட காலத்திற்கு வருவாயை தரக்கூடியதாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தரக்கூடிய சேவைகளை வழங்கியுள்ளோம். இது எங்களின் சிறந்த செயல் திறனை பிரதிபலிக்கிறது" என்று விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீனி பாலியா கூறியுள்ளார்.
தொடர்ந்து செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல நிறுவனங்களும் பணிநீக்கங்களை கையில் எடுக்கும் வேலையில் அதிக நிகர லாபத்தை பதிவு செய்து விப்ரோ நிறுவனம் தனித்து நிற்கிறது. அதோடு வருமானம் அதிகமாக கிடைக்கும் சாதகமான சூழல் இல்லை என்றாலும் தங்களுடைய சேவையை சரியாக செய்வதில் கவனம் செலுத்தியதால் தான் இத்தகைய லாபத்தை பதிவு செய்ய முடிந்தது என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலாண்டுகளிலும் இந்த லாப விகிதத்தை அப்படியே கொண்டு செல்ல முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது.
4-ஆம் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து கிடைத்த பணம் ரூ.3,750 கோடியாக உள்ளது. அதாவது ஐடி சேவை வழங்குதல் மற்றும் பிற சேவைகளை வழங்குவது என தினசரி செயல்பாடுகளில் இருந்து விப்ரோ நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் தான் இது. பெரிய பொருளாதார நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியிலும் வாடிக்கையாளரின் தேவையைப் புரிந்து லாபகரமான வளர்ச்சியுடன் நிறுவனம் இயங்கி வருவதாக விப்ரோ நிறுவனத்தின் CEO கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications