ஐடி துறையினை சேர்ந்த முன்னணி நிறுவனமான விப்ரோ இந்த முறை அதன் சகாக்களையும் முந்திக் கொண்டுள்ளது. எதில் முந்திக் கொண்டுள்ளது. என்ன விஷயம் வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த புதன்கிழமையன்று தனது நிதி அறிக்கையினை வெளியிட்டது விப்ரோ நிறுவனம்.
அதிலும் கடந்த மார்ச் 31, 2020-வுடன் முடிவடைந்த நிதியாண்டில் அதன் நிகரலாபம் 8.3% அதிகரித்து 9,772 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டு லாபம்
எனினும் அடுத்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு வழிகாட்டல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பெங்களூரினை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2018 - 19ம் நிதியாண்டில் அதன் நிகரலாபம் 9,017 கோடி ரூபாயினைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய் வளர்ச்சி
இதே விப்ரோ நிறுவனம் வருவாய் 4.2% அதிகரித்து 61,023.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்திய 2019ம் நிதியாண்டில் 58,584.5 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் காலாண்டு வாரியாக பார்க்கும் போது அதன் நிகரலாபம் 5.3% குறைந்துள்ளதாக விப்ரோ தெரிவித்துள்ளது.
வருவாய் இவ்வளவு தான்?
மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 5.3% நிகரலாபம் குறைந்து, 2,326 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் காலாண்டில் 2,456 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே மார்ச் காலாண்டில் வருவாய் 15,296 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது, இது முந்தைய காலாண்டில் 15,100 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
என்ன காரணம்?
முதன்முறையாக விப்ரோ நிறுவனம் அதன் சகாக்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களுக்கு முன்பே இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏப்ரல்- ஜூன் காலாண்டிற்காக நிதி நிலை வழிகாட்டல் அறிக்கையினையும் வெளியிடவில்லை. இதற்கு முக்கிய காரணம் பரவி வரும் கொரோனா என்றும் கூறப்படுகிறது.
செலவினை குறைக்க நடவடிக்கை
மேலும் நாட்டில் நிலவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் நிறுவனம் கடந்த நிதியாண்டில் சற்று லாபத்தினை கண்டு இருந்தாலும் அடுத்து வரும் காலாண்டுகளில் என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது தான் இந்த நிறுவனம் செலவினங்களை குறைக்க சில நடவடிக்கைகளை எடுத்து வருவதை அறிய முடிகிறது.
சம்பளம் இல்லா விடுமுறை
இதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் புதியதாக ஆள்சேர்ப்பு எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும் கூறியுள்ளது. அது மட்டும், அல்ல, பல ஊழியர்களுக்கும் ஊதியம் இல்லா விடுப்பு அளிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக இனி வரும் காலங்களில் இன்னும் என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கப்போகிறதோ தெரியவில்லை.
என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை?
எப்படி எனினும் அரசு தற்போது கொடுத்துள்ள ஏப்ரல் 20க்கும் மேல் 50% ஊழியர்களை வைத்து பணி புரிய வைக்கலாம் என்று கூறியுள்ளது சற்றே நிம்மதியை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி எனினும் கடந்த காலாண்டிலேயே வீழ்ச்சியை கண்ட நிலையில், நடப்பு காலாண்டில் கொரோனாவின் தாக்கம் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் நிறுவனங்கள் என்ன செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications