இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ செப்டம்பர் காலாண்டில் லாப அளவில் 9 சதவீதத்தை சந்தித்தது.
இதனால் முதலீட்டாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர், இதன் எதிரொலியாக விப்ரோ நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் தனது ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.
விப்ரோ
விப்ரோ நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களுக்குக் கடந்த காலாண்டுக்கான பேமெண்ட் கொடுக்கப்படாத நிலையிலும், கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளைப் பணியில் சேர்க்காமல் பணி நியமனத்தை ரத்து செய்துள்ள நிலையிலும் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிதாக ஒரு 5 ஆண்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
5 ஆண்டுத் திட்டத்தை
இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் விப்ரோ புதிதாகப் பணியில் சேரும் ஊழியர்களை அடிப்படையாக வைத்து தனது வர்த்தகத்தை அடுத்த 5 முதல் 10 ஆண்டுக் காலம் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக விப்ரோ நிறுவன பணியில் சேரும் பிரஷ்ஷர்களுக்கான 5 ஆண்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சம்பளம்
அதாவது விப்ரோ நிறுவனத்தில் ஒரு பிரஷ்ஷர் பணியில் சேர்ந்தால் அடுத்த 5 வருடத்திற்கு அவருடைய சம்பளம் எப்படி இருக்கும், சம்பள உயர்வு எப்படி இருக்கும், போன்ஸ் தொகை போன்றவற்றைக் குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மூன்லைட்டிங்
இதேவேளையில் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போதே வேறு நிறுவனத்தில் பணியாற்றினால் அதாவது மூன்லைட்டிங் செய்பவர்களைக் கண்டுபிடிக்க பிராவிடென்ட் பண்ட் தகவல்கள் செக் செய்வது உட்பட, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன் பணியாற்றுவது எனப் பல திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சௌரப் கோவில்
இந்த 5 ஆண்டுத் திட்டம் குறித்து அனைத்து பிரஷ்ஷர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது என விப்ரோ நிறுவனத்தின் தலைமை மனித வள பிரிவு அதிகாரியான Saurabh Govil தெரிவித்துள்ளார்.
15000 பிரஷ்ஷர்கள்
விப்ரோ நிறுவனம் முதல் 6 மாதத்தில் சுமார் 15000 பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்த்துள்ளதாகவும், இதில் 85 சதவீதம் பேருக்கு 100% வேரியபிள் பே கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் காலாண்டு முடிவுகள் படி விப்ரோ நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23 சதவீதமாக உள்ளது, இதுவே ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 23.8 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5 சதவீதமாக உள்ளது. இந்த அளவீட்டை கட்டுப்படுத்தவே 5 ஆண்டுத் திட்டம் மூலம் பிரஷ்ஷர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகின்றது.
More From GoodReturns

TCS அலுவலக மதமாற்ற சர்ச்சை: யார் அந்த ’Lady Captain’? பெண்களே அலுவலக நட்பில் எச்சரிக்கை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!



Click it and Unblock the Notifications