இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ தங்களுடைய ஊழியர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைத்திருந்த ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறது. செப்டம்பர் 2024க்கு பிறகு விப்ரோ நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் கலக்கமடைந்தனர்.
இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் தற்போது சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளன. கடந்த ஓராண்டு முழுவதும் அமெரிக்க பொருளாதார மந்த நிலை, ஐடி சேவைக்கான தேவை குறைந்தது, ஏஐ வருகை, மேக்ரோ பொருளாதார சூழல் காரணமாக ஐடி நிறுவனங்களின் நிலைமை சரியாக இல்லை. இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கை எடுத்து ஒட்டு மொத்த ஐடி துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேக்ரோ பொருளாதார சூழல், ஏஐ வளர்ச்சிக்கு ஏற்ப தகவமைத்து கொள்வது என்பன உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் ஐடி நிறுவனங்கள் புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைத்துவிட்டன. மேலும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்டவற்றையும் மிக கவனமாகவே கையாளுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் ஊதிய உயர்வையே பல மாதங்களுக்கு தள்ளி வைத்தன.
அந்த வகையில் விப்ரோ நிறுவனம் 2024 செப்டம்பருக்கு பின்னர் ஊதிய உயர்வு வழங்கவில்லை. விப்ரோ நிறுவனம் டிசம்பர் மாதத்திற்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது, சம்பள உயர்வு குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் எனக் கூறியிருந்தது. இந்த நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து விப்ரோ நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நல்ல செய்தி செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதில் எவ்வளவு சதவீத ஊதிய உயர்வு என்ற தகவல் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறியுள்ளது.
விப்ரோ நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் தான் உயர்வு வழங்கவில்லையே தவிர தொடர்ச்சியாக variable compensation- ஐ வழங்கி வருகிறது. டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் ஊழியர்களுக்கு 100% variable compensation வழங்கியது. அதற்கு முந்தைய இரண்டு காலாண்டுக்கும் 90% variable compensation வழங்கப்பட்டது.
இந்தியாவில் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்காமல், செப்டம்பரில் தான் வழங்கியது அதுவும் 8% வரை தான் வழங்கப்பட்டது. இன்போசிஸிஸ் நிறுவனமும் 5 முதல் 8% வரை ஊதிய உயர்வு வழங்கியது. காக்னிசண்ட் கூட ஏப்ரலில் இல்லாமல் கடந்த செப்டம்பரில் தான் ஊதிய உயர்வை வழங்கியது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications