இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் மகிழ்வித்துள்ளது.
பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் சம்பள உயர்வு அளிக்கும், ஆனால் இந்த ஆண்டு விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்கள் ஓரே ஆண்டில் 2வது முறையாகச் சம்பள உயர்வை அறிவித்துள்ளது. சம்பள உயர்வைத் தாண்டி பல முக்கிய அறிவிப்புகளையும் ஊழியர்களுக்கு அறிவித்து மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு
இந்திய ஐடி நிறுவனங்கள் உலக நாடுகளில் இருந்து அதிகளவிலான பிராஜெக்ட்களைப் பெற்று வரும் நிலையில் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிகளவிலான தட்டுப்பாடு உருவாகியுள்ளது. இதன் காரணமாக நிறுவனங்கள் மத்தியில் ஊழியர்கள் வெளியேற்றம் அதிகரித்துப் பெரிய அளவிலான தடுமாற்றத்தை அடைந்து வருகிறது.
2 முறை சம்பள உயர்வு
இந்நிலையில் விப்ரோ நிறுவனம் 2020ஆம் கொரோனா தொற்றுக் காரணமாகத் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிக்க முடியாத நிலையில், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2020க்கான சம்பள உயர்வை அளித்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வை ஜூன் மாதம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
1.97 லட்சம் ஊழியர்கள்
2021 ஜனவரி மாதத்தில் விப்ரோ நிறுவனம் தனது 80 சதவீத ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளித்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான சம்பள உயர்வு அனைத்து ஊழியர்களுக்கும், அதாவது 1.97 லட்சம் ஊழியர்களுக்கும் வருகிற ஜூன் மாதம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஒற்றை இலக்கில் சம்பள உயர்வு
மேலும் கொரோனா பாதிப்புக் காரணமாக ஜனவரி மாதம் அளிக்கப்பட்ட சம்பள உயர்வில் ஊழியர்களுக்கு ஒற்றை இலக்கில் மட்டுமே சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் இந்தச் சம்பள உயர்வு சிறப்பாக இருக்கும் என ஊழியர்கள் எதிர்பார்த்த நிலையில், நிறுவனத்தின் மார்ச் காலாண்டில் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியாமல் நிலையான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தது.
2வது சம்பள உயர்வு
இதனால் ஜூன் மாத சம்பள உயர்வில் மார்ச் காலாண்டு வளர்ச்சி அளவீட்டின் பாதிப்பு பிரதிபலிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் மத்தியில் அளிக்கப்படும் சம்பள உயர்வில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் இதர முக்கிய அறிவிப்புகளும் அறிவித்துள்ளது விப்ரோ.
ஜூனியர் ஊழியர்கள்
ஜனவரி மாத சம்பள உயர்வில் ஜூனியர் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதேபோல் ஜூன் காலாண்டில் ஜூனியர் ஊழியர்கள் அதாவது 3 வருடத்திற்கும் குறைவான அனுபவம் கொண்ட ஊழியர்களுக்குச் சம்பள உயர்வுடன், பதவி உயர்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஸ்கில் அடிப்படையில் போனஸ்
மேலும் உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வுடன், ஸ்கில் அடிப்படையிலான போனஸ் தொகையும் இந்த ஜூன் காலாண்டில் அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களைத் தக்க வைக்க முடியும் என விப்ரோ நிர்வாகம் நம்புகிறது.
ஊழியர்கள் வெளியேற்ற விகிதம்
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 11 சதவீதத்தில் இருந்து 12.1 சதவீதமாக உயர்ந்தது. இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரவே தற்போது 1.97 லட்சம் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ் எனப் பலவற்றை அறிவித்துள்ளது விப்ரோ.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications