இந்தியாவின் மிக பிரியமான மனிதர் அசிம் பிரேம்ஜி.. ஒவ்வொரு நாளும் ரூ.22 கோடி நன்கொடை..!

இந்தியாவின் மிக பிரியமான மனிதராக விப்ரோவின் அசிம் பிரேம்ஜி உருவெடுத்துள்ளார். இவர் ஒவ்வொரு நாளும் 22 கோடி ரூபாய் சமூக பணிகளுக்காக நன்கொடை அளித்துள்ளார்.

Recommended Video

இந்தியாவின் மிக பிரியமான மனிதர் Azim Premji | Most Generous Indian | Oneindia Tamil

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் உரிமையாளர் தான் அசிம் பிரேம்ஜி. இவர் கடந்த நிதியாண்டில் 7,904 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் 2020ம் நிதியாண்டில் அவர் மிகவும் பிரியமான இந்தியராக உருவெடுத்துள்ளார். இந்த ஆண்டு பெருநிறுவன நன்கொடையின் பெரும்பகுதி PM கேர்ஸ் நிதிக்கும் சென்றுள்ளது.

விப்ரோ மிகப்பெரிய நன்கொடை

விப்ரோ மிகப்பெரிய நன்கொடை

நாட்டின் மிகப்பெரிய ஐடி துறை நிறுவனமான விப்ரோவின் உரிமையாளர் அசிம் பிரேம்ஜி, இந்த ஆண்டு சமூக சேவைக்கு மிகப்பெரிய நன்கொடை அளித்துள்ளார். பிரேம்ஜி 2020 நிதியாண்டில் ஒவ்வொரு நாளும் 22 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். அதாவது ஆண்டு முழுவதும் அவர் .7,904 கோடி ரூபாயினை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்தியாவின் மிக பிரியமான மனிதர்

இந்தியாவின் மிக பிரியமான மனிதர்

இதனால் கடந்த 2020ம் நிதியாண்டில் பிரேம்ஜி மிகவும் பிரியமான இந்தியராக உருவெடுத்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர்களின் பட்டியலை ஹுருன் இந்தியா மற்றும் எடெல்கிவ் அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. இந்த பட்டியலில் தான் அசிம் பிரேம்ஜி முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் சிவ் நாடார்

இரண்டாவது இடத்தில் சிவ் நாடார்

சிவ் நாடார் கடந்த 2019ம் நிதியாண்டில் நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளராக இருந்தார். அதே நேரத்தில், 2019ல் அசிம் பிரேம்ஜி 426 கோடி ரூபாயினை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மூன்றாம் இடத்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானி மூன்றாவது இடம்

முகேஷ் அம்பானி மூன்றாவது இடம்

நாட்டின் மிகப்பெரிய பணக்காரரும் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி, கடந்த 2020 நிதியாண்டில் அவர் சமூக பணிகளுக்காக 458 கோடி ரூபாயினை நன்கொடை அளித்துள்ளார். அதே நேரத்தில், கடந்த ஆண்டு அவர் 402 கோடியை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் இந்த பட்டியலில் உள்ளனர்

யாரெல்லாம் இந்த பட்டியலில் உள்ளனர்

இந்த பட்டியலில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா நான்காவது இடத்திலும், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், ஐந்தாவது இடத்திலும் நன்கொடை அளிப்பதில் உள்ளனர். ஹுருன் இந்தியா மற்றும் எடெல்கிவ்வின் இந்த பட்டியலில் 10 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் 78 பேர் ஆவர். இது ஒரு வருடம் முன்பு 72 ஆக இருந்தது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த ஆண்டு கார்ப்பரேட் நன்கொடையின் பெரும்பகுதி பி.எம் கேர்ஸ் ஃபண்டிற்கும் சென்றுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+