பெங்களூர்: இந்தியாவில் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ 2025 ஆம் நிதியாண்டை மிகவும் நம்பிக்கையுடன் துவங்கியுள்ளது. ஒருபக்கம் ஐடி சேவைக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்ற கணிப்புகள் இருக்கும் இதேவேளையில், புதிய சிஇஓ செயல்பாடுகள் அதிரடியான வளர்ச்சியை நிறுவனத்தில் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்களும், ஐடி துறையைத் தொடர்ந்து கவனிப்பவர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான சீனிவாஸ் பல்லியா-வின் சம்பளம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீனிவாஸ் பல்லியா பதவியில் இருக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான அதிகபட்ச ஊதியமாக 7 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அடிப்படை ஊதியம் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் $1.75 மில்லியன் முதல் அதிகபட்சமாக $3 மில்லியன் வரை இருக்கும்.
இந்த தகவலை, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (SEBI) விப்ரோ நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாஸ் பல்லியா-வின் வருடாந்திர அடிப்படை ஊதியம் $1,750,000 முதல் $3,000,000 வரை இருக்கும் என்றும், இலக்கு சார்ந்த வேரியபிள் ஊதியம் ஆண்டுக்கு $1,750,000 முதல் $3,000,000 வரை இருக்கும் என்றும் விப்ரோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில், நிறுவனத்தின் வருவாய், லாபம் மற்றும் இயக்குநர் குழுவால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் பிற அளவுகோல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஊதியம் வழங்கப்படும்.
புதிய தலைமை செயல் அதிகாரிக்கு, நீண்டகால ஊக்கத் தொகையாக அமெரிக்க டெபாசிட்டரி ஷேர்ஸ் (ADS) ரெஸ்டிரிக்டட் ஸ்டாக் யூனிட்கள் (ADS RSUs) மற்றும் ADS பர்ஃபார்மென்ஸ் ஸ்டாக் யூனிட்கள் (ADS PSUs) வழங்கப்படும். இதன் மொத்த மதிப்பு $4,000,000 ஆகும். இதில், $1,400,000 மதிப்பிலான ADS RSUs மற்றும் $2,600,000 மதிப்பிலான ADS PSUs அடங்கும்.

இந்த பங்குகளை எப்போது பயன்படுத்தலாம் என்ற கால அட்டவணையும் விப்ரோ தெரிவித்துள்ளது. மே 2, 2025ல் 25%, மே 2, 2026ல் 25%, மே 2, 2027ல் 50% பயன்படுத்த முடியும் (வெஸ்டிங் காலம்). இதில் செயல்திறன் அடிப்படையிலான பங்குகள் என்பது நிறுவனத்தின் கொள்கையின்படி வருவாய், லாபம் மற்றும் இலவச ரொக்க வரவு இலக்குகளை அடைவதைப் பொறுத்தே அளிக்கப்படும்.
மேலும், இயக்குநர் குழுவால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் பிற அளவுகோல்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் இந்த பங்குகள் வழங்கப்படும். இலக்கை பூர்த்தி செய்தால் முழுமையாக அளிக்கப்படும், இல்லையெனில் இலக்கில் அடைந்துள்ள வளர்ச்சியைப் பொருத்து பங்குகள் அளிக்கப்படும்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications