ஐடி துறையில் இன்றளவிலும் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய கூறி வருகின்றன. சில நிறுவனங்கள் படிப்படியாக அலுவலகம் வருவோர் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றன. சில நிறுவனங்கள் ஹைபிரிட் மாடலை பின்பற்றி வருகின்றன.
ஊழியர்கள் ஒரு பகுதியினர் அலுவலகம் சென்று பணிபுரிவதே சிறந்தது என்று கூறினாலும், பெரும்பாலும் வீட்டில் இருந்து பணிபுரிவதையே விரும்புகின்றனர்.
அலுவலகம் வரணும்
இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, தங்களது ஊழியர்கள் சிறிது காலம் அலுவலகம் வருவதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
நாஸ்காம் ப்ராடக்ட் கான்க்ளேவ் 2022 (Nasscom Product Conclave 2022) கூட்டத்தில் பேசிய பிரேம்ஜி, இது குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
சவாலான நிலை
கொரோனாவுக்கு பின்பு நிறுவனத்திற்குள் ஒரு இணைப்பினை உருவாக்க நிறுவனம் எதிர்கொண்டுள்ள சவால்களை பற்றி கூறியவர், அது மிகப்பெரிய சவால் என கூறியுள்ளார்.
ஊழியர்கள் அனைவரும் சிறிது காலம் அலுவலகம் வரவேண்டும். நாங்கள் அனைத்து நேரத்திலும் அலுவலகம் வரக் கூறவில்லை. நிறுவனமும் அதனை விரும்பவில்லை. இது குறித்து உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருக்க முடியாது. எனினும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சந்தேகம் தான்
மொத்தத்தில் தற்போதைக்கு அலுவலகமும் சில நாட்கள் வரவேண்டிருக்கும். வீட்டில் இருந்தும் பணிபுரியும் சூழல் இருக்கும் எனலாம்.
எனினும் இது நிரந்தரமாக இருக்குமா? என்பது பெரும் கேள்வியாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் மூன்லைட்டிங் குறித்து ஏற்கனவே பணி நீக்கம் செய்துள்ள விப்ரோ., இனி அதனை கடுமையாக கண்கானிக்கலாம். இதனால் வீட்டில் இருந்து பணி புரியும் ஆப்சன் குறித்து யோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேப்பி நியூஸ்
அப்படியும் வீட்டில் இருந்தோ அல்லது ஹைபிரிட் மாடல் பணியோ கொடுத்தாலும் கூட, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு ஊழியர்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்யும் விதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ தற்போதைக்கு ஹைபிரிட் மாடல் பணி என்பது ஊழியர்களுக்கு கொண்டாட்டமான விஷயம் தான்.


Click it and Unblock the Notifications