பெங்களூரு: 20 ஆண்டு காலத்திற்கும் மேலாக விப்ரோ நிறுவனத்தில் மூத்த நிலை அதிகாரியாக பணிபுரிந்து வந்த ஸ்ரீனி ராஜாமணி ஒரு சிறிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பணிக்காக இந்த வேலையை விட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் அமெரிக்க பிரிவுக்கான தொழிலை கண்காணித்து வழிநடத்தி வரக்கூடியவர் தான் ஸ்ரீனி ராஜாமணி. இவர் திடீரென தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஃபின் டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பணியில் சேர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விப்ரோ நிறுவனத்தில் அண்மை காலமாகவே மூத்த நிலையில் பணியில் இருக்கும் பலரும் திடீரென தங்களுடைய வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஸ்ரீனி ராஜாமணி ராஜினாமா செய்திருக்கிறார் . 2005 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த இவர் விப்ரோ நிறுவனத்தின் கன்ஸ்யூமர் பிசினஸ் மற்றும் லைஃப் சயின்ஸ் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார் .
கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் விப்ரோவில் முக்கியமான பணி நிலையிலிருந்து அவர் திடீரென தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியை சேர்ந்த ஓபஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம் கார்டு மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் பேமண்ட் கேட்வே பிரிவுகளில் வளர்ந்து வரக்கூடிய நிறுவனமாக இருக்கிறது. சுமார் 800 ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் இந்தியாவில் புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் அலுவலகத்தை அமைத்து செயல்பட்டு வருகிறது. தற்போது ஐடி துறை பெரிய அளவில் மாறிவிட்டதாக தெரிவித்திருக்கும் ஸ்ரீனி ராஜாமணி ஓபஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஃபின் டெக் துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக இருக்கிறது என கூறியுள்ளார் .
விப்ரோ நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த தியரி டெலப்போர்டே கடந்த ஆண்டு திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து ஸ்ரீனிவாச பல்லையாவை விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தனர்.
அவர் பொறுப்பேற்றது முதலே விப்ரோ நிறுவனத்தில் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி , தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் இருந்தவர்கள் என அடுத்தடுத்து பலரும் ராஜினாமா செய்து விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விப்ரோ நிறுவனத்தில் மூத்த நிலையில் இருந்த 30 பேர் வேலையில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக தெரிய வருகிறது.
இதனுடைய ஸ்ரீனிவாஸ் பல்லையா நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை தந்து பதவி உயர்வு அளித்து இந்த பதவிகளை நிரப்பி வருகிறார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications