அடிதூள்.. விப்ரோ பங்குகள் 4% வளர்ச்சி.. 2 முக்கிய காரணம்.. செம லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்போசிஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக விப்ரோ ஐரோப்பியச் சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறக் கடுமையான முயற்சிகளைச் செய்து வரும் இதே வேளையில் இந்நிறுவனத்தின் பைபேக் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு டிசம்பர் 22ஆம் தேதி அளவை விடவும் சுமார் 10 சதவீத ப்ரீமியம் தொகையில் பங்குகளைப் பெறுவதாக அறிவித்துள்ளது.

 

இதோடு விப்ரோ ஜெர்மனி நாட்டின் உணவு சேவை நிறுவனமான மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் ஐடி சேவை வர்த்தகத்தை 700 மில்லியன் டாலருக்குக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

இவ்விரண்டு அறிவிப்பின் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

 விப்ரோ பைபேக் திட்டம்..!

விப்ரோ பைபேக் திட்டம்..!

விப்ரோ நிறுவனத்தின் பைபேக் திட்டத்திற்கு ஏற்கனவே உயர்மட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது டிசம்பர் 22ஆம் தேதி நிலவரப்படி 364.20 ரூபாய் என்ற அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு 10 சதவீத ப்ரீமயம் தொகையில் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது விப்ரோ நிர்வாகம்.

 10 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்பு

10 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்பு

விப்ரோ-வின் 10 சதவீத ப்ரீமியம் தொகை அறிவிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வேளையில் ரீடைல் முதலீட்டுச் சந்தையில் இந்நிறுவனப் பங்குகளுக்குக் கூடுதலாக 10 சதவீத வளர்ச்சிக்கு வித்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அடுத்த ஒரு வார காலத்திற்குள் விப்ரோ நிறுவனப் பங்குகள் 10 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணிப்புகள் நிலவுகிறது.

 ஜெர்மனி மெட்ரோ நிறுவன வர்த்தகம்
 

ஜெர்மனி மெட்ரோ நிறுவன வர்த்தகம்

இதேநேரத்தில் விப்ரோ நிறுவனம் ஜெர்மனி நாட்டின் உணவு சேவை நிறுவனமான மெட்ரோ ஏஜி நிறுவனத்தின் ஐடி சேவை வர்த்தகத்தை மொத்தமாகச் சுமார் 700 மில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் 5 வருடத்தில் இருந்து 4 வருடம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டால் இந்த ஒப்பந்த மதிப்பு 1 பில்லியன் டாலர் வரையில் உயரும் என விப்ரோ தெரிவித்துள்ளது.

 1300 ஊழியர்கள்

1300 ஊழியர்கள்

விப்ரோ மற்றும் மெட்ரோ ஏஜி நிறுவன ஒப்பந்தம் மூலம் மெட்ரோ நிறுவனத்தின் 1300 ஊழியர்கள் விப்ரோ நிறுவனத்தில் இருந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விப்ரோ பல புதிய துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். மேலும் ஐரோப்பிய சந்தையில் இருந்து கூடுதலான வர்த்தகத்தையும் பெற முடியும்.

 4 சதவீத வளர்ச்சி

4 சதவீத வளர்ச்சி

இந்த இரண்டு அறிவிப்பின் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது.

பைபேக் ப்ரிமியம் தொகை மூலம் 10 சதவீத வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாக்கியதன் வாயிலாகவும், இன்போசிஸ் நிறுவனத்தைப் போலவே புதிய வர்த்தகத்தைக் கைப்பற்றியதன் வாயிலாகவும் இன்று விப்ரோ பங்குகள் 4 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆபீஸ்-க்கு வராத புதிய விப்ரோ சீஇஓ.. என்ன நடக்கிறது..!ஆபீஸ்-க்கு வராத புதிய விப்ரோ சீஇஓ.. என்ன நடக்கிறது..!

விப்ரோ ஊழியர்கள் மகிழ்ச்சி.. ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு..!விப்ரோ ஊழியர்கள் மகிழ்ச்சி.. ஜனவரி 1 முதல் சம்பள உயர்வு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro shares gain 4percent ahead of 10% premium on buyback, $700 million deal with Metro

Wipro shares gain more than 4percent ahead of 10% premium on buyback, $700 million deal with Metro
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X