விப்ரோ பங்குகள் 70% வளர்ச்சி.. புதிய சீஇஓ வந்த பின்பு நடந்த மேஜிக்..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தில் பல ஆலோசனைக்குப் பின்பு Thierry Delaporte இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நிர்வாகக் குழு நியமித்தது.

இவரின் வருகைக்குப் பின் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் அளவீடுகள் கொரோனா பாதிப்பையும் தாண்டி வளர்ச்சியை அடைந்தது. இதன் எதிரொலியாகக் கடந்த 5 மாதத்தில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் சுமார் 70 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

விப்ரோ தலைமை அலுவலகம்

விப்ரோ தலைமை அலுவலகம்

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட Thierry Delaporte 5 மாத காலத்தில் ஒரு முறை கூடப் பெங்களூரில் இருக்கும் விப்ரோ தலைமை அலுவலகத்திற்கு ஒரு முறை கூட வரவில்லை. அனைத்து பணிகளையும் நிர்வாகக் கூட்டங்களையும் பாரிஸ்-ல் உள்ள அவரது வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி வருகிறார்.

விப்ரோ வர்த்தகம் பாதிப்பு

விப்ரோ வர்த்தகம் பாதிப்பு

கொரோனா தொற்றின் காரணமாக விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வர கடுமையாகப் பணியாற்றி வருகிறார். பாரீஸ்-ல் தனது வீட்டில் இருந்தே நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள், உலகம் முழுவதிலும் இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பேசி வருகிறார்.

நிர்வாகக் குழு சீரமைப்பு

நிர்வாகக் குழு சீரமைப்பு

Thierry தலைமையிலான விப்ரோ நிறுவனத்தின் உயர் மட்ட நிர்வாகம் 25 பேரில் இருந்து வெறும் 4 பேர் கொண்டு குழுவாக மறுசீரமைப்புச் செய்யப்பட்டது. மேலும் புதிய வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்காக நிறுவனங்களைக் கைப்பற்றும் பணியில் இறங்கியுள்ளார். ஜூலை 6ஆம் தேதி விப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாகப் பதவியேற்றிய Thierry Delaporte அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சந்தையில் இருந்து பல திட்டங்களைக் கைப்பற்றியுள்ளார்.

விப்ரோ பங்குகள் அதிரடி வளர்ச்சி

விப்ரோ பங்குகள் அதிரடி வளர்ச்சி

இதன் வாயிலாக இந்தியாவின் 4வது பெரிய ஐடி நிறுவனமாக இருக்கும் விப்ரோ நிறுவனப் பங்குகள் இவரது நியமனத்திற்குப் பின் சுமார் 70 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கொரொனாவால் பாதிப்பு நிறைந்த இந்தக் காலகட்டத்தில் விப்ரோ நிறுவனத்தின் இந்த வளர்ச்சி இந்நிறுவனத்தின் நிர்வாகத்தையும் தாண்டி முதலீட்டாளர்களும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியாக உள்ளது.

ஜூலை 6 நியமனம்

ஜூலை 6 நியமனம்

Thierry Delaporte விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 6ஆம் தேதி தலைவராக நியமிக்கப்பட்ட போது விப்ரோ நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 222.65 ரூபாய்.

இவருக்கு முன்பு அபித்அலி நீமுச்வாலா விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

 

விப்ரோ பங்கு வளர்ச்சி

விப்ரோ பங்கு வளர்ச்சி

இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கு மதிப்பு 358.25 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் விப்ரோ நிறுவனத்தின் தனது 52 வார உயர்வான 381.70 ரூபாய் அளவீட்டுக்குச் சற்று குறைவாக 377.50 ரூபாய் அளவை அடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+