இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் பங்கு விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்று விப்ரோ பங்குகள் 9.5% வரை குறைந்து ரூ.241.75 என்ற குறைந்த அளவை எட்டியது.
இன்றைய விப்ரோ நிறுவனத்தின் மோசமான சரிவுக்கு முக்கியமான காரணம், இந்நிறுவனம் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் மற்றும் 2026ஆம் நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்புகள் முதலீட்டாளர்களை பெரிய அளவில் ஏமாற்றியதே இதற்கு முக்கிய காரணம். விப்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறிய காரணத்தால் கடந்த சில வருடங்களாக தடுமாறி வருகிறது.

விப்ரோவின் ஐடி சேவைகள் பிரிவு வருவாய் டிசம்பர் காலாண்டில் சுமார் 2.6 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய காலாண்டை விட சிறு அதிகம் தான். ஆனால் அடுத்த காலாண்டில் அதாவது மார்ச் காலாண்டில் இதன் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிலையான நாணய அடிப்படையில் 0 முதல் 2 சதவீதம் வரை மட்டுமே வளர்ச்சி இருக்கும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் விப்ரோ முதலீட்டு மீதான நம்பிக்கையை குறைத்தது.
இந்த நிலையில் உலகளாவிய தரகு நிறுவனமான ஜெஃபரீஸ் விப்ரோ பங்குக்கு "அண்டர்பெர்ஃபார்ம்" மதிப்பீட்டை வழங்கியுள்ளது. மேலும் டார்கெட் விலையை ரூ.220 ஆக நிர்ணயித்துள்ளது. இது பங்கின் தற்போதைய விலையை விட குறைவு என்பதால் முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை விற்க துவங்கினர்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் விப்ரோவின் லாப வளர்ச்சி ஆண்டுக்கு 2 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று ஜெஃபரீஸ் கணித்துள்ளது. தற்போதைய டிவிடெண்ட் அளவு 3 சதவீதமாக இருப்பதால், பங்கு விலை இன்னும் குறைய வேண்டும் என்று ஜெஃபரீஸ் கூறியுள்ளது. விப்ரோவின் வளர்ச்சி குறைவுக்கான காரணங்களும் முதலீட்டாளர்களை கவலையடையச் செய்தன.
இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை மட்டுமே கொடுத்துள்ளது. டிசிஎஸ், இன்பசிஸ், ஹெச்சிஎல் என அனைத்து நிறுவனங்களும் லாபத்தில் சரிவை பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் 1.4 சதவீதமும், இன்போசிஸ் 0.37 சதவீதமும் சரிந்துள்ளது. இதேவேளையில் இன்று சர்வதேச முதலீட்டு சந்தையும் மோசமாக இருக்கும் காரணத்தாலும், ஏஐ மூலம் வரும் பாதிப்பு காரணமாகவும் ஐடி நிறுவன பங்குகள் இன்று அதிகளவில் சரிவை சந்தித்து வருகிறது.
டிசம்பர் காலாண்டு முடிவுகளும், ஐடி பங்குகளின் தொடர் சரிவும் ஐடி ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே வேலைவாய்ப்பு அதிகளவில் குறைந்துள்ளது, இந்த மோசமான காலாண்டு முடிவும் அடுத்த சில மாதங்களில் கிடைக்கும் சம்பள உயர்வு, வேரியபிள் பே ஆகியவை பாதிக்கப்பட உள்ளதாக சந்தேகிக்க


Click it and Unblock the Notifications