வேட்டைக்கு தயாரான விப்ரோ.. 20000 ஊழியர்களுக்கு இணையாக வேலை செய்யும் ஏஐ!

இந்திய ஐடி சேவை துறையில் தொடர்ந்து பின்தங்கி வந்த விப்ரோ நிறுவனத்தில் AI தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான சந்தியா அருண் கொடுத்த பேட்டியில் தற்போது விப்ரோ நிறுவனத்தில் 20,000 ஊழியர்கள் செய்யும் வேலைக்கு சமமான ப்ரோடெக்டிவிட்டி ஏஐ மூலம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

வேட்டைக்கு தயாரான விப்ரோ.. 20000 ஊழியர்களுக்கு இணையாக வேலை செய்யும் ஏஐ!

இந்தியாவில் 315 பில்லியன் டாலர அளவிலான ஐடி சேவை துறை ஏஐ தொழில்நுட்பத்தால் மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் வேளையில் ஏஐ மூலம் பெரிய அளவிலான முன்னேற்றம் அடைந்துள்ளதாக விப்ரோ கூறியது புதிய நம்பிக்கை அளித்துள்ளது.

இதேவேளையில் விப்ரோ எவ்விதமான பணிநீக்கத்தையும் தற்போது கையில் எடுக்கவில்லை. ஒரு ஐடி சேவை திட்டத்தில் AI மூலம் சில வேலைகள் வேகமாகவும் குறைந்த நேரத்திலும் செய்ய முடிந்ததால் கூடுதல் வர்த்தகத்தையும், லாபத்தையும் பெற முடியும்.

அந்த வகையில் தான் தற்போது ஏஐ மூலம் 20000 ஊழியர்களுக்கு இணையாக திறனை பெற்றுள்ளதாக விப்ரோ தலைமை தொழில்நுட்ப அதிகாரி தெரிவித்துள்ளார்.

விப்ரோ நிறுவனத்தில் தற்போது 2,43,000 ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில், தற்போது 1 லட்சம் ஊழியர்களு மேம்பட்ட ஏஐ பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் விப்ரோ ஹியூமன் - ஏஐ ஆப்ரேட்டிங் மாடலுக்கு மாறியுள்ளதாக சந்தியா அருண் தெரிவித்துள்ளார்.

அதாவது இனி விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்கள் அதிகப்படியான ஏஐ ஏஜெண்ட்களை நிர்வாகம் செய்யப்போகிறார்கள் இதன் மூலம் வேலைகள் வேகமாகவும், திறன்படவும் முடிக்கப்பட உள்ளது எனவும் விளக்கினார் சந்தியா.

இதேவேளையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் ஜூன் மாதம், புதிதாக சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையின் வேகத்தை குறைக்க உள்ளதாகவும். நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கைக்கு இணையாக ஏஐ ஏஜெண்ட்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் வாயிலாக 8900 forward-deployed engineers உருவாக்கும் பணியிலும் டிசிஎஸ் இறங்கியுள்ளது, இதேபோல் இன்போசிஸ் நிறுவனமும் 6000 forward-deployed engineers-களை நியமித்து ஏஐ பயன்பாட்டை நிறுவனத்திலும், தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையிலும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+