இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ தனது ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் சம்பள உயர்வு கொடுத்த நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் அளிப்பதாக அறிவித்து, சில நாட்களுக்கு முன்பு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் MSI என அழைக்கப்படும் அதன் வருடாந்திர மெரிட் சேலரி இன்கிரீசஸ் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
அனைத்து விப்ரோ ஊழியர்களும் சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்நிறுவனத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகளுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விப்ரோ-வின் உள் நிறுவன தகவல் பரிமாற்றத்தில் வெளியிட்டப்பட்ட அறிவிப்புகளில் இந்த வரும் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகளுக்கான சம்பள உயர்வு ரத்து செய்வதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு 3 மாதம் தாமதம் என விப்ரோ ஊழியர்கள் சோகத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில் சம்பள உயர்வு ரத்து செய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து விப்ரோ நிறுவனத்தின் எண்டர்பிரைசர் ஃபியூச்சரிங் வர்த்தக பிரிவின் மேனேஜிங் பார்ட்னர் மற்றும் தலைவரான நாகேந்திர பண்டாரு கூறுகையில் நாங்கள் இப்போது வருடாந்திர மெரிட் சேலரி இன்கிரீசஸ் நடைமுறையை ஒவ்வொரு வர்த்தக பிரிவின் நிதி நிலைமையை பொருத்து செயல்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது விப்ரோ ஊழியர்களில் சம்பளம் குறைவாக வாங்குவோருக்கு முக்கியதுவம் கொடுத்து சம்பள உயர்வு அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதோடு இந்த சுற்றில் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு இருக்காது என தெரிவித்தார்.
விப்ரோ நிறுவனத்தின் இந்த நடைமுறையை இன்போசிஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்களும் பின்பற்ற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. நவம்பர் மாதம் முதல் சம்பள உயர்வை அளிப்பதாக கூறிய இன்போசிஸ் இன்னும் அதன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கடிதத்தை அனுப்பவில்லை.


Click it and Unblock the Notifications