இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு பெரும் இழப்பை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய அதிகாரிகள் மீது அடுத்தடுத்து வழக்கு தொடுத்து மற்ற உயர் அதிகாரிகளுக்குப் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் சுமார் 21 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணியாற்றிய ஜதின் தலால் தனது தலைமை நிதி அதிகாரி பதவியை ராஜினாமா செய்தது விப்ரோ நிர்வாகத்திற்கு மட்டும் அல்லாமல் சக ஐடி ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. இதை விட முக்கியமாக அவர் அமெரிக்கச் சாப்ட்வேர் நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்-ல் புதிய தலைமை நிதி அதிகாரியாகச் சேர்ந்தது தான்.

ஜதின் தலால் செப்டம்பர் மாத இறுதியில் விப்ரோ பதவியை ராஜினாமா செய்த நிலையில், டிசம்பர் மாதம் CTS நிறுவன பணியில் சேர்ந்தார். ஜதின் தலாலின் ராஜினாமா முன்னாள் விப்ரோ உயர் அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் ஜதின் தலால் மீது பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கு எதற்காகத் தொடுக்கப்பட்டது என்பதற்கான தகவல் வெளியாகாத நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை வருகிறது.
விப்ரோ நிர்வாகம் ஜதின் தலால் மீது வழக்கு தொடுத்ததை தொடர்ந்து, தலால் இந்த விஷயத்தை நடுவர் மன்றத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டு நீதிமன்றத்தில் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நீதிமன்றம் ஜனவரி 3 ஆம் தேதி இருதரப்பு வாதங்களையும் கேட்க உள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் சுமார் 21 வருடம் பணியாற்றியது மட்டும் அல்லாமல் CFO என்ற உயர்பதவியிலும் பணியாற்றிய ஜதின் தலால் மீது விப்ரோ நிர்வாகம் வழக்குத் தொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
செவ்வாய்க்கிழமை தான் விப்ரோ, முகமது ஹக் என்ற முன்னாள் உயர் அதிகாரி தங்களுடைய non-compete clause ஒப்பந்தத்தை மீறி போட்டி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் ஆகஸ்ட் மாதம் சேர்ந்துள்ளார் என வழக்குப் பதிவு செய்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தில் முகமது ஹக் அமெரிக்க ஊழியராகவும், உயர் துணைத் தலைவர் (SVP) மற்றும் லோக்கலைசேஷன் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் கையெழுத்திட்ட non-compete clause ஒப்பந்தம் படி விப்ரோ நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்பு காக்னிசென்ட் உட்படச் சில குறிப்பிட்ட நிறுவனத்தில் 12 மாதம் பணியாற்றக் கூடாது என்ற கண்டிஷன் உள்ளது. இதை மீறி CTS-ல் சேர்ந்துள்ளதால் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இப்படிப் பல உயர் அதிகாரிகள் வெளியேறி வரும் வேளையில் விப்ரோ நிறுவனத்தின் முக்கியப் பதவியில் முன்னாள் L&T இன்ஃபோடெக் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஜலோனா விப்ரோ உயர் பதவியில் சேர உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதை விப்ரோ மற்றும் சஞ்சய் ஜலோனா திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications