ஆன்போர்டிங் தாமதம்.. பிரெஷ்ஷர்களுக்கு சம்பளமும் குறைவு.. விப்ரோ-ல் என்னதான் நடக்குது?

ஐடி நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களாகவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் சர்வதேச நிறுவனங்கள் தொடங்கி, இந்திய நிறுவனங்கள் வரையில் பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன.

பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து சம்பள குறைப்பினை செய்து வருகின்றன. குறிப்பாக ரெசசன் அச்சம் என்பது சந்தையில் இருந்து வரும் நிலையில், பணி நீக்கமும் இருந்து வருகின்றன.

பலரும் இண்டர்னலில் தோல்வி

பலரும் இண்டர்னலில் தோல்வி


நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நிறுவனங்கள் இன்டர்னல் தேர்வு என வைத்து, அதில் பலரும் தோல்வியுற்றதாக கூறி, பணி நீக்கம் செய்து வருகின்றன. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். கடந்த ஆண்டில் இருந்தே ஐடி துறையில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஆன்போர்டிங்-கினை தாமதப்படுத்தி வருகின்றன என்ற சர்ச்சையும் இருந்து வருகின்றது.

சம்பளமும் குறைப்பு

சம்பளமும் குறைப்பு

அந்த வகையில் ஐடி முன்னணி நிறுவனமான விப்ரோ நிறுவனம் முன்னதாக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, 6.5 லட்சம் ரூபாய் வருடத்திற்கு சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 3.5 லட்சம் பெற தயாராக இருக்கிறீர்களா? என கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நிலவி வரும் நிச்சயமற்ற தேவை, மார்ஜின் அழுத்தம், ரெசசன் அழுத்தம் மத்தியில் வந்துள்ளதாக தெரிகிறது.

இரண்டு வகையான சம்பளம்

இரண்டு வகையான சம்பளம்

புதிய பட்டதாரிகளுக்கு நிறுவனம் இரண்டு வகையான பணியமர்த்தல் திட்டங்களை வழங்குகிறது. இதில் எலைட் மற்றும் டர்போ எலைட் என இரு திட்டங்களை வழங்குகிறது. இதில் எலைட் ஊழியர்களுக்கு வருடத்திற்கு 3.5 லட்சம் சம்பளத்தினை வழங்குகிறது. அதேசமயம் டர்போ ஊழியர்களுக்கு வருடத்திற்கு 6.5 லட்சம் ரூபாய் சம்பளத்தினை வழங்குகிறது. இதில் டர்போ ஊழியர்கள் எனில் விப்ரோ நிறுவனத்தின் திறனை மேம்படுத்தும் பயிற்சியினை பெற வேண்டும்.

ஆன்போர்டிங் சம்பளம்

ஆன்போர்டிங் சம்பளம்

வருடத்திற்கு 6.5 லட்சம் ரூபாய் சம்பளத்தினை பெற்ற ஊழியர்கள், நிறுவனத்தின் ஆன்போர்டிங்கிற்காக காத்துக் கொண்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 16 அன்று விப்ரோவிடமிருந்து ஒரு மெயில் வந்தது. அதில் குறைந்த ஊதியம் பெறும் ஆப்சனை தேர்வு செய்யவும் என மெயில் வந்துள்ளது.

சலுகைகள் செல்லாது

சலுகைகள் செல்லாது

இந்த ஆஃபரை மாணவர்கள் ஏற்றக் கொண்டால், அவர்கள் மார்ச் முதல் ஆன்போர்டு செய்யப்படுவார்கள். மேலும் முந்தைய சலுகைகள் அனைத்தும் செல்லாது. இந்த சலுகையை ஏற்க நீங்கள் தேர்வு செய்தால், முந்தைய சலுகைகள் அனைத்தும் செல்லாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். ஏனெனில் இது காலக்கெடுவுக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது.

எப்போது கிடைக்காது

எப்போது கிடைக்காது

ஒரு பிரெஷ்ஷர் குறைந்த சலுகையை ஏற்க வேண்டாம் எனத் தேர்வு செய்தால், அவர்கள் அசல் சலுகையை தொடர்ந்து வைத்திருக்கலாம். எனினும் எங்கள் பணியமர்த்தல் திட்டங்கள் நடைமுறையில் உள்ள பொருளாதார சூழல் மற்றும் வளரும் வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதால், அது எந்த தேதியில் இணைக்கப்படுவார்கள் என உறுதியளிக்க முடியாது என மெயிலில் தெரிவித்துள்ளது.

பல மாதங்கள் ஆகிவிட்டது

பல மாதங்கள் ஆகிவிட்டது

ஏற்கனவே மாணவர்களுக்கு இந்த கடிதம் கொடுத்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஒரு இடைவெளி உள்ளது. ஆக இந்த கடிதத்தினை வைத்துக் கொண்டு காத்திருக்க முடியாது. ஆக இதனை தற்போதைக்கு ஏற்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டே 3.5 லட்சம் ரூபாய் எனில் எங்களுக்கு பல வேலைகள் கிடைத்திருக்கும். ஆனால் விப்ரோவில் 6.5 லட்சம் சம்பளம் என்பதால் தான் நாங்கள் காத்திருந்தோம் என மாணவர்கள் புலம்பியுள்ளனர்.

ஏமாற்றம் கண்டு விட்டோம்

ஏமாற்றம் கண்டு விட்டோம்

ஒரு மாணவர் எனக்கு பல சலுகைகள் கிடைத்தது. ஆனால் நான் விப்ரோவில் சலுகைக்காக காத்திருந்தேன். ஆனால் நாங்கள் ஏமாற்றம் கண்டு விட்டோம் என கூறியுள்ளனர். ஆனால் நிறுவனம் தரப்பில் நாங்கள் கல்லூரி வளாகங்களுக்கு சென்று கேம்ப்ஸ் இண்டர்வியூ நடத்திய போது தேவை அதிகம் இருந்தது. சந்தை ஏற்றத்தில் இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. ஆக நிறுவனம் இப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.

இது போறாத காலம்

இது போறாத காலம்

விப்ரோவின் இந்த அறிவிப்பானது பயிற்சிக்கு பிறகும் 452 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது. மொத்தத்தில் ஐடி ஊழியர்களுக்கு இது போறாத காலம் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+