இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கான பணி நேரத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. வொர்க் ப்ரம் ஹோம் முறையில் இருந்து ஹைப்ரிட் கொள்கைக்கு மாறினாலும் ஊழியர்களின் செயல்திறன் பெரிய அளவை உயர்த்த வேண்டும் என ஐடி நிறுவனங்கள் அனைத்தும் திட்டம்போட்டு பணியாற்றி வருகிறது.
சமீபத்தில் காக்னிசென்ட் ஊழியர்களை புதிய சாப்ட்வேர் மூலம் கண்காணிக்கப்படுவதாக அறிவித்தது யாராலும் மறக்க முடியாது, இது ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தாலும், நிர்வாக அளவில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில் விப்ரோ நிர்வாகம் ஊழியர்களின் பணி நேரத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஜனவரி 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது, ஹைப்ரிட் மாடல் கீழ் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வருவது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் விப்ரோவில் அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை.
இதில் முக்கியமான மாற்றம் வந்துள்ளது, அதாவது இனி ஒவ்வொரு ஊழியரும் அலுவலகத்திற்கு வரும் 3 நாளில் குறைந்தது ஆறு மணி நேரம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சுமார் 234,000 ஊழியர்களைக் கொண்ட இந்த நிறுவனம், ஹைப்ரிட் பணி முறையைத் தொடர்ந்தாலும், அலுவலக வருகைக்கும், பணிநேரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் விடுமுறை நாட்களையும் பாதிக்கும் வகையில் உள்ளன.
ஊழியர்கள் கவலை
விப்ரோ நிறுவனத்தில் முன்பு வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலக வந்தால் போது, அலுவலகத்தில் இருக்கும் நேரம் மிகவும் Flexible ஆக இருந்தது. இப்போது அலுவலகத்தில் நுழைந்து வெளியேறும் நேரத்திற்கு மத்தியில் குறைந்தது ஆறு மணி நேரம் இருக்க வேண்டும் என்று புதிய விதி வந்துள்ளது.
இதை பூர்த்தி செய்யாத ஊழியர்களின் விடுமுறை இருப்பில் விடுமுறை கழிக்கப்படும். உதாரணமாக, ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை கழிக்கப்படும். இந்த விதி இந்தியாவில் உள்ள அனைத்து விப்ரோ ஊழியர்களுக்கு பொருந்தும்.
வொர்க் ப்ரம் ஹோம் முறை
விப்ரோ நிறுவனம் முன்பு ஆண்டுக்கு 15 நாட்கள் தற்காலிக ரிமோட் வொர்க் வசதியை அளித்தது. இப்போது அதை 12 நாட்களாக குறைத்துள்ளது. இந்த 12 நாட்களை தனிப்பட்ட காரணம், உடல்நலக் குறைவு அல்லது குடும்ப உறுப்பினர்களை கவனிப்பதற்காக பயன்படுத்தலாம்.
விப்ரோ நிர்வாகம்
இந்த நிலையில் விப்ரோ நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில், நிறுவனத்தில் ஹைப்ரிட் பணி முறைதான் எதிர்கால பணி முறை என்று தெரிவித்துள்ளது. மேலும் ஆறு மணி நேரம் அலுவலகத்தில் இருப்பது குறைந்தபட்சம் என்றாலும், தினசரி பணி நேரம் 9.5 மணி நேரமாகவே உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளது.
மீதமுள்ள நேரத்தை வீட்டிலிருந்து பணியாற்றி, வேலைகளை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த மாற்றங்கள் ஊழியர்களிடையே புதிய சவால்களை ஏற்படுத்தினாலும், நிறுவனம் பணித்திறனை மேம்படுத்துவதாகக் கருதுகிறது.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications