10,000 – 12,000 பேர்.. விப்ரோ வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு..!

பெங்களூரு: இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் மீண்டும் கேம்பஸ் மூலம் ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்த ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ 10,000 முதல் 12,000 பேர் வரை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஃபிரஷர்களாக பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் மனித வளத்துறை மூத்த அதிகாரி சவுரப் கோவில் தங்கள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 2025- 26ஆம் நிதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 10,000 முதல் 12,000 மாணவர்களை ஃபிரஷர்களாக தேர்வு செய்து வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

10,000 – 12,000 பேர்.. விப்ரோ வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு..!

காலாண்டு அடிப்படையில் இந்த எண்ணிக்கை மாறுபடுமே தவிர ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது கண்டிப்பாக 10,000 முதல் 12, 000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் முதல் மூன்று காலாண்டில் 7,000 பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அவர் அடுத்த காலாண்டில் சுமார் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக விப்ரோவின் போட்டி நிறுவனமாகவும் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாகவும் இருக்கும் இன்போசிஸ் 2026 ஆம் நிதி ஆண்டில் தங்கள் நிறுவனம் 20,000 ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்தும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான் விப்ரோ நிறுவனமும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கேம்பஸ் மூலம் ஆட்களை வேலைக்கு தேர்வு செய்வது தொடர்பான தங்களுடைய நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக கோவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வேலை வாய்ப்புக்கான ஆஃபர்கள் பெற்று நிலுவையில் வைத்திருந்தவர்களுக்கு தற்போது ப்ராஜெக்ட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தங்கள் நிறுவனம் ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்தும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். எனவே தங்கள் நிறுவனத்தில் ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறை பெரிய அளவிலான மாற்றங்களுக்கு உள்ளாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கேம்பஸ் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு சேர்வதற்கு முன்பாகவே அவர்களுக்கு தேவையான பல்வேறு திறன் பயிற்சிகளும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேக்ரோ பொருளாதார சூழல் மந்தமாக இருந்ததால் ஐடி நிறுவனங்கள் ஃபிரஷர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்தி வைத்திருந்தன.

அப்படி வேலைக்கு எடுத்திருந்தாலும் வேலைவாய்ப்பு வழங்காமல் காக்க வைத்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் கேம்பஸ் மூலம் ஃபிரஷர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன. அதே வேளையில் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ற அடிப்படை திறன்கள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் மாணவர்கள் அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என ஐடி நிறுவனங்கள் கூறுகின்றன.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+