இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கொடுத்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சம்பள உயர்வுகளை வெளியிட உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
அடுத்த சில நாட்களில் விப்ரோ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ள நிலையில், தற்போது ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பொங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் விப்ரோ டிசம்பர் 1 ஆம் தேதி முதல் MSI என அழைக்கப்படும் அதன் வருடாந்திர மெரிட் சேலரி இன்கிரீசஸ் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த சம்பள உயர்வு செப்டம்பர் காலாண்டில் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் விப்ரோ நிர்வாகம் சுமார் 1 காலாண்டு தாமதமாக தனது ஊழியர்களுக்கு அளிக்க உள்ளது. விப்ரோ நிறுவனம் இந்த தாமதத்திற்கு ஐடி துறையின் வர்த்தகத்தை பாதித்த மேக்ரோ எக்னாமிக் பிரச்சனை மற்றும் மார்ஜின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி வருகிறது.
இதுகுறித்து விப்ரோ நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான சௌரப் கோவில் விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் மோசமான சர்வதேச சந்தை பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தாலும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சம்பள உயர்வு அதாவது MSI அமலாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பள உயர்வு ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும். மேலும் சம்பள உயர்வு ஒரு ஊழியரின் சம்பளம், பதவி, டார்கெட்-கள் பூர்த்தி செய்வதன் அடிப்படையில் மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ஜதின் தலால் இந்நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பின்பு புதிய வாய்ப்புக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த சில நாட்களில் அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இவரை புதிய தலைமை நிதி அதிகாரியாக நியமித்தது.
ஜதின் தலால் வெளியேற்றம் இந்திய ஐடி சேவை துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்ல.


Click it and Unblock the Notifications