இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ. டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து பெருமளவில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வரும் நிறுவனம் இது. இந்நிறுவனத்தின் தலைவர் ரிஷத் பிரேம்ஜி , நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையுடன் முதலீட்டாளர்களுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
2024 ஆம் நிதியாண்டு விப்ரோ நிறுவனத்திற்கு மிகவும் சவாலான ஒரு ஆண்டாக இருந்தது என ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவன வரலாற்றிலேயே 2024 ஆம் ஆண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது, சர்வதேச அளவில் பொருளாதார சூழல் மிகவும் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என தெரிவித்தார்.

இருப்பினும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்காலத்திற்கான முதலீட்டை தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். குறுகிய கால சவால்களை முதலீட்டாளர்கள் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் விப்ரோ நிறுவனத்தின் அடிப்படை மாறாமல் அப்படியே தான் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை பொறுத்தவரை விப்ரோ நிறுவன தலைமையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இது நிறுவனத்தின் செயல் திறன், வருமானம் மற்றும் லாபம் ஆகியவற்றிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. விப்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த தியரி டெலபோர்ட் பதவி விலகினார், இதனை அடுத்து ஸ்ரீனிவாச பள்ளியா ஏப்ரல் மாதம் முதல் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய நான்கு முக்கிய ஐடி சேவை நிறுவனங்களில் கடந்த ஆண்டில் விப்ரோ நிறுவனத்திற்கு மட்டும்தான் வருமானம் குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனத்தின் வருமானம் 4.4% என குறைந்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 29.1 பில்லியன் டாலர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 18.6 பில்லியன் டாலர், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் 13.3 பில்லியன் டாலர் என உயர்வை கண்டது. ஆனால் விப்ரோவின் வருவாய் மட்டும் சரிவடைந்துள்ளது.
இதனிடையே தங்களது நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்திற்கு மாறுவதில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என பிரேம்ஜி கூறியுள்ளார். தங்கள் நிறுவனத்தின் உள் செயல்பாடுகளுக்கு ஜெனரேட்வ் ஏஐ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் விப்ரோ நிறுவனம் கிட்டத்தட்ட 30000 ஊழியர்களுக்கு நவீன செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சியை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். WiNow எனப்படும் தங்களின் சாட்பாட் அடிப்படையிலான ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம், ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications