இந்தியாவின் 4 வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ செப்டம்பர் காலாண்டில் 14.6 சதவீதம் உயர்வில் 22,540 கோடி ரூபாய் வருவாய் பெற்றாலும் லாபத்தில் சரிவைச் சந்தித்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபத்தின் அளவு 9.3 சதவீதம் சரிந்து 2600 கோடி ரூபாயை பெற்று உள்ளது. முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் விப்ரோ மட்டும் சரிவை சந்தித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இதேவேளையில் கடந்த 2 மாதத்தில் 4 உயர் அதிகாரிகள் பணியை ராஜினாமா செய்த நிலையில், இன்று மிகவும் முக்கியமான உயர் அதிகாரியான அங்கன் குஹா ராஜினாமா செய்துள்ளார்.
விப்ரோ
விப்ரோ நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தில் 3ல் ஒரு பங்கு வர்த்தகத்தை நிர்வாகம் செய்யும் உயர் நிர்வாகத் தலைவரான அங்கன் குஹா தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இவருடன் சேர்த்துக் கடந்த 2 மாதத்தில் 5 உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
28 வருட பணி
Angan Guha விப்ரோ நிறுவனத்தில் சுமார் 28 வருடம் பணியாற்றியுள்ளார், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் எனப் பல நாடுகளின் வர்த்தகத்தில் முக்கியப் பதவிகளில் இருந்தவர். ஜனவரி 2021ல் விப்ரோ நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தின் சிஇஓ-வாகப் பதிவி உயர்வு பெற்றார்.
31.3 சதவீத வருமானம்
ஜூலை- செப்டம்பர் காலாண்டில் அங்கன் குஹா நிர்வாகம் செய்யும் அமெரிக்காவின் சந்தையில் இருந்து விப்ரோ நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தில் 31.3 சதவீத வருமானம் வந்துள்ளது. அங்கன் குஹா-வின் ராஜினாமா விப்ரோ நிறுவனத்திற்குப் பெரிய இழப்பு, இதேவேளையில் அமெரிக்கா சந்தையில் போட்டிப்போடும் பிற இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது ஜாக்பாட்.
நிர்வாகக் குழு
அங்கன் குஹா மற்ற உயர் அதிகாரிகள் போல் அல்லாமல் விப்ரோ நிர்வாகத்தின் 11 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ளார். இந்தக் குழு தான் விப்ரோ நிர்வாகத்தின் அதிகப்படியான அதிகாரம் கொண்ட குழுவாக உள்ளது. டக்ளஸ் சில்வா, டோமோக்கி டேகுச்சி, சாரா ஆடம்-கெட்ஜ், முகமது அரேஃப் ஆகியோர் கடந்த 2 மாதத்தில் பணியை ராஜினாமா செய்தவர்கள்
விப்ரோ நிலை என்ன..?
விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்டே நிர்வாக முறையில் இருக்கும் பிரச்சனையின் காரணமாக அடுத்தடுத்து உயர் அதிகாரிகள் வெளியேறுகிறார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது. 2022 துவங்கியது முதல் விப்ரோ தொடர் சரிவு பாதையை எதிர்கொண்டு வருகிறது. இப்படியிருக்கையில் ரெசிஷன் நிலையை விப்ரோ எப்படிச் சமாளிக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications