இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேரியபிள் தொகையை லாப நோக்கத்திற்காக இதற்கு முன்பு பல முறை குறைத்து வந்த நிலையில் கடந்த சில காலாண்டில் அதிகப்படியான லாபத்தைப் பெற்ற நிலையில் அதிகப்படியான ஊழியர்களுக்கு 100 சதவீத வேரியபிள் பே தொகையை விப்ரோ உட்பட நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அளித்தது.
இந்த நிலையில் விப்ரோ நிறுவனம் டிசம்பர் காலாண்டுக்கான வேரியபிள் பே தொகையை அறிவித்துள்ளது.
விப்ரோ
விப்ரோ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிசம்பர் காலாண்டுக்கு அதன் ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகை 87 சதவீதம் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகை அனைவருக்கும் கிடைக்குமா என்றால் இல்லை.
வேரியபிள் பே தொகை
விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 80 சதவீத ஊழியர்களுக்குச் சராசரியாகத் தங்களது வேரியபிள் பே தொகையில் 87 சதவீதம் அளிக்கும் என அந்நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
80 சதவீத ஊழியர்கள்
இந்த 80 சதவீத ஊழியர்கள் பிரிவில் விப்ரோ நிறுவனத்தின் A டூ B3 பேண்ட் ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தின் பிரஷ்ஷர்கள் முதல் டீம் லீடர் பதவிகளில் இருப்பவர்கள் வரையில் அடங்குவார்கள்.
87 சதவீதம் வேரியபிள் பே
80 சதவீத ஊழியர்களுக்குச் சராசரியாக 87 சதவீதம் வேரியபிள் பே அளிக்கப்பட்டாலும் ஒவ்வொரு அணியில் செயல்திறன் அடிப்படையில் இந்த அளவீடு அதிகமாக இருக்கலாம். உதாரணமாகச் சிறப்பாகப் பணியாற்றி நிர்வாகத்திற்கு அதிக லாபம் கொடுத்த அணிகளுக்கு 100 சதவீத வேரியபிள் பே அளிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
விப்ரோ ஆப்ரேட்டிங் மார்ஜின்
விப்ரோ நிர்வாகம் கடந்த காலாண்டில் அனைத்து ஊழியர்களுக்கும் 100 சதவீத வேரியபிள் பே அளித்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் விப்ரோ டிசம்பர் காலாண்டில் முந்தைய காலாண்டை ஒப்பிடுகையில் 0.6 சதவீத வருவாய் வளர்ச்சியும், ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு 16.3 சதவீதமாக உள்ளது. ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவீடு விப்ரோ டார்கெட்-ஐ காட்டிலும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
100 சதவீதம் வேரியபிள் பே
இதன் வாயிலாகவே கடந்த காலாண்டில் 100 சதவீதம் வேரியபிள் பே அளித்த விப்ரோ நிர்வாகம், இந்த டிசம்பர் காலாண்டுக்கு விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 80 சதவீத ஊழியர்களுக்குச் சராசரியாகத் தங்களது வேரியபிள் தொகையில் 87 சதவீதம் அளிக்கும் என அறிவித்துள்ளது.
வேரியபிள் பே என்றால் என்ன..?
ஒவ்வொரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் அதாவது CTC-யில் 10 முதல் 30 சதவீதம் வரையிலான தொகையை வேரியபிள் பே கீழ் சேர்க்கப்படும். இந்த அளவீடு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியரின் சம்பளம், பதவிக்கு ஏற்ப மாறுபடும். மேலும் இந்த வேரியபிள் பே தொகையை ஒவ்வொரு காலாண்டிலும் தத்தம் ஊழியர் மற்றும் ஊழியர் பணியாற்றும் செயல்திறன் அடிப்படையில் அளிக்கப்படும்.


Click it and Unblock the Notifications