இந்திய ஐடி சேவை நிறுவனங்களின் மந்தமான வர்த்தகத்தின் எதிரொலியாக பல முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் ஊழியர்களுக்கான சம்பளத்திலும், வேரியபிள் பே தொகையிலும் கைவைத்தது. இதனால் பல ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வை கொடுத்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் சம்பள உயர்வுகளை வெளியிட உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் ஒரு காலாண்டு அளவில் சம்பள உயர்வை அளிப்பதில் தாமதம் ஏற்படுத்தியுள்ளது.

விப்ரோ தனது ஊழியர்களுக்கு டிசம்பர் காலாண்டில் அளிக்க உள்ள 2022-23 ஆம் நிதியாண்டுக்கான சம்பளத்தில் சராசரியாக அனைவருக்கும் 6% -8% அளவில் அளிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் வர உள்ளது. அதே நேரத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய அனைத்து ஊழியர்களுக்கும் இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் செய்தியாளர் சந்திப்பில் விப்ரோ நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது. இதன் மூலம் ஊழியர்களின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் குறைந்தது.
இதுவரை, இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனங்களில், டிசிஎஸ் சராசரியாக 6% முதல் 8% வரையிலான சம்பள உயர்வை கொடுத்தது. முந்தைய ஆண்டைப் போலவே, சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் இரட்டை இலக்க சம்பள உயர்வு பெற்றனர்.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வழக்கமாக ஜூன்/ஜூலை மாதங்களில் சம்பள உயர்வுகளை அறிவிக்கும் வேளையில், அது ஏப்ரல் முதல் அமலுக்கு வரும். ஆனால் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வை இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்களான Coforge, Persistent Systems மற்றும் LTI Mindtree ஆகியவை சம்பள உயர்வை அறிவித்துள்ளன.
இன்போசிஸ் கடந்த வருடத்திற்கான சம்பள உயர்வை அளிக்காத நிலையில் சலில் பாரிக் தலைமையிலான இன்போசிஸ் நிர்வாகம் செம்படம்பர் 29 முதல் ஊழியர்களுக்கான செல்ஃப் எவால்யூவேஷன் துவங்கும் அக்டோபர் மாதம் ஃபர்பாமென்ஸ் ரிவ்யூ சைக்கிள் துவங்கும் என்றும் இதன் மூடிவுகள் அக்டோபர் மாதம் இறுதியில் மேனேஜர்கள் ஊழியர்களின் தனி மதிப்பீட்டை ஆய்வு செய்து ரேட்டிங் வழங்க உள்ளனர் என்றும், ஊழியர்களுக்கான ரேட்டிங் அறிவிப்பை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அறிவிக்க துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

கோடிகளில் புரளும் கோலிவுட்! சூப்பர் ஸ்டார் vs தளபதி - இந்தியாவின் காஸ்ட்லி நடிகர் யார்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications