இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ (Wipro) உலக நாடுகளில் பல கிளைகளை கொண்டு பல்லாயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை ஐடி துறையை தாண்டி பல துறைகளில் செய்து வருகிறது. இது இந்தியாவிலேயே ஆறாவது பெரிய நிறுவனமாக விளங்கும் விப்ரோ தற்போது முக்கிய தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளது.
பெங்களூரு, ஹைதராபாத், புனே, சென்னை, கொல்கத்தா, கோயம்புத்தூர் மற்றும் பல நகரங்களில் விப்ரோவின் ஐடி அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. விப்ரோ ஐடி சேவையை தாண்டி கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் பிரிவிலும் இயங்கி வருகிறது. விப்ரோ சுமார் 167 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.

விப்ரோ நிறுவனம், இந்தியாவில் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. விப்ரோவின் கன்ஸ்யூமர் பிரிவில் முன்னணி பிராண்டான சான்டூர் உள்ளது, இந்தியாவின் மிகவும் பிரபலமான சோப்பு பிராண்டுகளில் ஒன்றாகும்.
இதுதவிர, யார்ட்லி, என்சாண்டர், ஹைஜீனிக்ஸ், சந்திரிகா (ஆயுர்வேத குளியல் பொருட்கள்), குளுகோவிட்டா (எனர்ஜி பானம் மற்றும் டேப்லெட்), Safewash (Liquid detergent), Softouch (Fabric conditioner), Giffy (Dish wash liquid), Maxkleen, விப்ரோ கார்னெட் (LED விளக்குகள்) மற்றும் அரமஸ்க் (ஆண்களுக்கான அழகு பராமரிப்பு பொருட்கள்) ஆகிய பிராண்டுகளின் கீழ் விப்ரோ பல பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இத்தகைய விப்ரோ நிறுவனம், கடந்த 6 மாதங்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்துக்குப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாத நிலையில், அதன் ஒரு உற்பத்தி பிரிவை மூட முடிவு செய்துள்ளது.
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள பட்டி (Baddi) என்ற இடத்தில் உள்ள விப்ரோவின் உற்பத்தி தொழிற்சாலை தற்போது மூடப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங் பிரிவு சார்ந்த பல பொருட்ரள் தயாரிக்கப்படுகிறது. இந்த கிளையில் சுமார் 80 பேர் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஆறு மாதங்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நிதி இழப்புகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை சந்தித்த விப்ரோ நிறுவனம், இந்தக் கிளையை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளது. மற்ற கிளைகள் இயல்பான முறையில் இயங்கிக் கொண்டே இருக்கின்றன.
இதுக்குறித்து விப்ரோ நிறுவனம் கூறுகையில், தொழிலாளர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. அந்த குழுவுடன் நிறுவனம் சமரசம் அடையவில்லை. ஊழியர்கள் சங்கம் மாநில முதல்வர் மற்றும் தொழிலாளர் துறையிடம் முறையிட்டுள்ளது.
தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. வேலை இழந்தவர்கள் நியாயமான இழப்பீடு மற்றும் மாற்று வேலை வாய்ப்புகளை கோரி போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக, விப்ரோ நிறுவனத்தின் மற்ற தொழிற்சாலை ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலும், இந்த ஒரு பிரிவின் மூடல் அங்குள்ள ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதலாக, அந்த தொழிற்சாலை மூலம் பொருட்களை வழங்கும் சப்ளையர்களுக்கு இதன் தாக்கத்தை ஏற்படும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications