சென்னை: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ, மார்ச் 30 உடன் முடிவடைந்த 2024 ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் அதன் நிகர லாபம் கடந்த ஆண்டின், இதே Q4 காலாண்டுடன் ஒப்பிடும்போது 8% குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் Q4 காலாண்டில் ரூ.3,074 கோடியிலிருந்து, ரூ.2,835 கோடியாக குறைந்துள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையின் படி, ஆபரேஷன்ஸ் பிரிவில் இதன் நிகர வருவாய், கடந்த ஆண்டு Q4 காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் குறைந்து ரூ.22,208 கோடியாக உள்ளது. கடந்த வருடம் Q4 காலாண்டில் இதன் நிகர வருவாய் ரூ.23,190 கோடியாக இருந்தது.

Q4 காலாண்டில் ஐடி சேவைகள் பிரிவில் இருந்து கிடைத்த வருவாய் முந்தைய காலாண்டில் இருந்ததைப் போலவே $2,657.4 மில்லியனாக இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.4% குறைந்துள்ளது. இதற்கிடையில், நிலையான நாணய அடிப்படையில், IT சேவைகளின் வருவாய் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 0.3% மற்றும் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 6.6% குறைந்துள்ளது.
விப்ரோ இக்காலாண்டில் பெற்ற மொத்த ஒப்பந்தங்களின் மதிப்பு $3.6 பில்லியன் ஆகும் , இவற்றில் பெரிய ஒப்பந்தங்கள் $1.2 பில்லியன், முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 31% அதிகம் மற்றும் கடந்த ஆண்டின் இதே Q4 காலாண்டோடு ஒப்பிடுகையில் 9.5% அதிகரிப்பைக் குறிக்கிறது.
"FY24 எங்கள் தொழில்துறைக்கு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது, மேலும் மேக்ரோ பொருளாதார சூழல் நிச்சயமற்றதாகவே உள்ளது. இருப்பினும், வரவிருக்கும் வாய்ப்புகள் குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எங்கள் நோக்கங்களை அடைய உலகளவில் 230,000க்கும் மேற்பட்ட விப்ரோ ஊழியர்களின் திறன்கள், தலைமைத்துவம் மற்றும் ஆதரவு உள்ளது. நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருந்தாலும், ஒன்றாகச் செயல்படுவதன் மூலம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முன்னேற முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று விப்ரோவின் CEO மற்றும் MD ஸ்ரீனி பாலியா தெரிவித்துள்ளார்.

Q4 காலாண்டிற்கான செயல்பாட்டு மார்ஜின்கள் 16.4% ஆக அதிகரித்துள்ளன, இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 40 அடிப்படை புள்ளிகள் (BPS) வளர்ச்சியைக் காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை கொண்டு வர தொடங்கி இருப்பதால், அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப மாற்றத்திற்குத் தயாராகி வருவதாக விப்ரோ குறிப்பிட்டுள்ளது.
IT சேவைகளிலிருந்து ஜூன் மாதத்தில் இதன் காலாண்டு வருவாய் $2,617 மில்லியன் முதல் $2,670 மில்லியன் வரை இருக்கும் என்று விப்ரோ நிறுவனம் எதிர்பார்க்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications