ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனமான தைவான் நாட்டின் விஸ்திரான் கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் அமைத்திருக்கும் தொழிற்சாலையில் சில நாட்களுக்கு முன் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்ட ஊதிய வழங்குவதில் பிரச்சனை ஆனது.
இதனால் கோபம் அடைந்த விஸ்திரான் ஊழியர்கள் இணைந்து தொழிற்சாலையை அடித்து உடைத்துப் பல பொருட்களை நாசம் செய்தனர். இந்நிலையில் தற்போது சேதம் அடைந்த அனைத்தையும் விஸ்திரான் சரி செய்து உற்பத்தியை முழுமையாகத் துவங்கியுள்ளது.

ஊழியர்கள் தாக்குதல் காரணமாக விஸ்திரான் தொழிற்சாலை டிசம்பர் 12ஆம் தேதி முதல் உற்பத்தி பணிகள் முடங்கியும், தொழிற்சாலை மூடப்பட்டும் இருந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய உற்பத்தி இலக்கில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மார்ச் 8ஆம் தேதி முதல் கோலார் மாவட்டத்தில் நாரசாபுராவில் இருக்கும் தொழிற்சாலை முழுமையாக இயங்க துவங்கியுள்ளது எனக் கர்நாடக மாநிலத்தின் பெரு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊழியர்கள் தாக்குதலைத் தொடர்ந்து விஸ்திரான் நிறுவனத்தின் துணைத் தலைவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முறையாகச் சம்பளம் அளிக்கப்படாதது தெரிய வந்துள்ளது. இதற்கு விஸ்திரான் ஊழியர்களிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications