உலக நாடுகள் தங்களுடைய ஆயுத பலத்தை நிரூபணம் செய்வதற்காக அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கின்றன. இந்தியா கூட அணு ஆயுதத்தை தயாரித்து வைத்திருக்கிறது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் இருக்கும் நாடாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கின்றன.
இந்த நாடுகள் தேவையில்லாமல் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை குறைக்கும் நோக்கிலும் மேற்கொண்டு இவை அணு ஆயுதங்களை மேம்படுத்துவதை கட்டுப்படுத்தவும் தான் இந்திய அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஒரு அணு ஆயுத ஒப்பந்தம் என்பது ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா இடையிலான இந்த அணு ஆயுத ஒப்பந்தம் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு அணுசக்தி நாடுகளுக்கு இடையே இருக்கும் கடைசி பன்னாட்டு ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம் வரக்கூடிய வியாழக்கிழமை நள்ளிரவோடு காலாவதியாக இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளும் தங்களுடைய அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதை உறுதி செய்தது.
அதாவது இரண்டு நாடுகளும் 1550 அணு ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது குறித்து கடந்த செப்டம்பரில் பேட்டி அளித்த ரஷ்ய அதிபர் புதின் ஓராண்டுக்கு இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரை செய்தார். ஆனால் இது தொடர்பாக டிரம்ப் இதுவரை தீர்மானமான பதிலை தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா அரசாங்கம் தற்போது சீனாவும் வேகமாக அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதால் இந்த நியூ ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ரஷ்யா என இரண்டு நாடுகள் மட்டும் இல்லாமல் சீனாவையும் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறது. சீனாவை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டு வந்து விட்டால் அந்த நாடு அணு ஆயுதங்கள் மேம்படுத்துவதை கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறார் டிரம்ப். ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகளையும் இந்த மூன்று நாடுகளும் இதுவரை தொடங்கவே இல்லை.
கூடிய விரைவில் இந்த ஒப்பந்தமும் முடிவடையும் இருப்பதால் அமெரிக்கா ரஷ்யா இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் சட்டபூர்வமான கட்டுப்பாடு இல்லாமல் போகும். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் மோதல் போக்கு நீடிக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இருந்தெல்லாம் வெளியில் வந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவுக்கே முதல் உரிமை என்ற முழக்கத்தை நோக்கி தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த சூழலில் மீண்டும் ஒரு அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் அவர் ஈடுபடுவாரா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இது உலக அளவில் ஒரு அணு ஆயுதப்போரை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
More From GoodReturns

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications