வங்கியில் ரூ.10 லட்சம் பணம் எடுக்குறீங்களா? ஐடி துறைக்கு உங்க மேல தான் கண்ணு! கேஷ் எடுக்க லிமிட் என்ன?

இங்கு ஒவ்வொருவரும் பாதுகாப்பிற்கு பயந்து எவ்வளவு பணம் வந்தாலும் அதை வங்கி கணக்கில் தான் பராமரித்து வருகிறோம். நம்முடைய பணம் தானே.. அதை எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நியாயப்படி பார்த்தால் அது உண்மைதான். ஆனால் சட்டப்படி அவ்வாறு செய்ய முடியாது. பணம் எடுப்பதற்கும் சில விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது.

வருமான வரித்துறையினர் உங்களை பல வழிகளில் கண்காணிக்கின்றனர். அதற்கேற்ப வெவ்வேறு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் அதற்கு உதவி வருகின்றன. உதாரணமாக நீங்கள் வங்கி கணக்கிலிருந்து அதிக அளவிலான தொகையை வித்ட்ரா செய்தால் கண்டிப்பாக அந்தந்த வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒரு வருடத்திற்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்?: வங்கிகளைப் பொறுத்தவரை வருடத்தை விட நிதியாண்டு தான் கணக்கு. எனவே உங்கள் கணக்கிலிருந்து ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.10 லட்சம் வரை எடுக்கலாம். ஏன் அதற்கு மேல் கூட பணம் எடுக்கலாம். எந்தத் தடையும் இல்லை. ஆனால் நீங்கள் அப்படி பணம் எடுக்கும் பட்சத்தில், வங்கிகள் உங்கள் விவரங்களை வருமான வரித்துறைக்கு வழங்கிவிடும். பொதுத் துறை வங்கியின் முக்கிய இன்டர்னல் ஆடிட் ஆபிஸராக இருக்கும் ஆஷிஷ் ஜா என்பவர் ஒருவர் எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கான சில விவரங்களை கூறியுள்ளார். அதாவது நீங்கள் உங்கள் கணக்கில் இருந்து எடுக்கும் பணம் எங்கிருந்து வந்தது?, எப்படி பெறப்பட்டது? என்பதற்கான சரியான ஆதாரங்கள் இருந்தால்.. எவ்வளவு பணம் எடுத்தாலும் பிரச்சினை இல்லை. அதற்கு வருமான வரி கிடையாது.

வங்கியில் ரூ.10 லட்சம் பணம் எடுக்குறீங்களா? ஐடி துறைக்கு உங்க மேல தான் கண்ணு!

உங்களுடைய வங்கிக் கணக்கில் நீங்கள் செய்யும் அதிகபட்ச பரிவர்த்தனையை வங்கிகள் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அதாவது சேவிங்ஸ் அக்கவுண்டாக இருந்தால் ரூ.10 லட்சம் வரையிலான பணத்தை கேஷ்-ஆக எடுக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுடைய தகவல் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். அதேபோல கரண்ட் அக்கவுண்டாக இருந்தால் ஒரு வருடத்திற்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் பரிவர்த்தனை நடக்கும் பட்சத்தில் வருமான வரித்துறை உங்களை கண்காணிக்க தொடங்கும்.

ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமாக கேஷ் எடுக்கும் போது வருமான வரிச் சட்டம் பிரிவு 393(3)(3)-இன் கீழ் டிடிஎஸ் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. சரி ரூ.10 லட்சத்திற்கும் மேல் பரிவர்த்தனை செய்யும் போது உடனே வருமான வரித்துறை கண்காணிக்குமா? அல்லது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். வங்கி கணக்கில் பணம் இருப்பதாலும், நீங்கள் பணத்தை எடுப்பதாலும் மட்டும் பிரச்சினை ஏற்படாது. வருமான வரித்துறை முதலில் உங்களுடைய இன்கம் டேக்ஸ் ரிட்டன், ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மென்ட் போன்ற அனைத்தையும் சரிபார்க்கும். அதை வைத்து உங்களுடைய ரிஸ்க் ஸ்கோர் மதிப்பிடப்படும்.

இதையெல்லாம் வைத்து உங்களுடைய வருமானம் என்ன? அதை விட நீங்கள் அதிகமான பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுக்கறீர்களா? என்பது சரிபார்க்கப்படும். ஒரு சில நேரங்களில் திடீரென சிலர் அதிக அளவிலான தொகையை எடுத்து விட்டு மீண்டும் அதே அளவுக்கான தொகையை டெபாசிட் செய்வார்கள். இப்படி வழக்கத்திற்கு மாறாக பரிவர்த்தனை நடக்கும்போது அது வரி ஏய்ப்பாக கருதப்பட வாய்ப்புள்ளது.

அதிக பணப்பரிவர்த்தனை செய்யும் நபரை வங்கிகள் எப்படி வருமானவரித்துறைக்கு வழங்கும் தெரியுமா? முதலில் அதற்கு ஃபார்ம் 155-ல் அக்கவுண்ட் வைத்திருப்பவரின் பெயர், பான் நம்பர், ஆதார் நம்பர், அக்கவுண்ட் நம்பர், எவ்வளவு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது போன்ற அனைத்தையும் வங்கிகள் சமர்ப்பிக்கும். இதை வைத்து வருமான வரி அதிகாரிகள் சரிபார்ப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள். அதிலும் அவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் உடனே வருமானவரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கு பயப்படத் தேவையில்லை.. நீங்கள் உங்கள் அக்கவுண்டுக்கு வந்த பணத்திற்கு முறையான ஆதாரத்தை வைத்திருந்தால் போதும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+