செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த தொழில்நுட்பத்தில் பல்வேறு அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கூகுள், மைக்ரோசாப்ட் என பெரிய பெரிய நிறுவனங்கள் அனைத்துமே இந்த போட்டியில் தாக்குப் பிடிப்பதற்காக தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றன.
வேலைகளை பறிக்கும் ஏஐ: செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வருகையால் மனிதர்களின் வேலை வாய்ப்பு படிப்படியாக மறைந்து வருகிறது. இந்த சூழலில் பெர்பிளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அடுத்த ஆறு மாதங்களில் குறிப்பிட்ட சில வேலைகளை முழுமையாக ஏஐ பறித்துக் கொள்ளும் என தெரிவித்திருக்கிறார். பெர்பிளெக்சிட்டி ஏஐ என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நிறுவனம். இதன் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் செயல்பட்டு வருகிறார்.

பெர்பிளெக்சிட்டி ஏஐ: இவர் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் பல்வேறு வேலை வாய்ப்புகளை பறிக்கப் போகிறது எனக் கூறியிருக்கிறார். இளைஞர்கள் வெறுமனே செல்போனில் ரீல்ஸ் ஷார்ட் பார்த்து ஸ்க்ராலிங் செய்து கொண்டிருக்காமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வது நல்லது என கூறி இருக்கிறார் . செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் குறிப்பிட்ட சில வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்து இருக்கிறது என கூறியிருக்கும் அவர் முதலில் ஹெச்ஆர் வேளையில் இருப்பவர்கள் தான் இதில் பாதிக்கப்பட போகின்றனர் என தெரிவித்திருக்கிறார் .
ஒரு பிராம்ப்ட் போதும்: ஒரு நிறுவனத்தில் ஊழியர்களை வேலைக்கு வேண்டுமென விளம்பரம் செய்வது ,வரக்கூடிய ரெஸ்யூம்களை ஆய்வு செய்வது, அவர்களுக்கு என நேர்காணல்களை ஷெட்டியூல் செய்வது என ஒரு ஹெச்ஆர் ஒரு வாரத்திற்கு செய்ய வேண்டிய வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒரே பிராம்ப்டில் செய்து முடித்து விடும் எனக் கூறியிருக்கிறார்.
அசிஸ்டெண்ட் வேலைகள்: பெர்பிளெக்சிட்டி ஏஐ நிறுவனம் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய டெக் நிறுவனங்களுக்காக எல்லாம் போட்டியாக comet என்ற ஏஐ தேடு பொறியை அண்மையில் தான் அறிமுகம் செய்தது. இந்த கோமெட் தேடு பொறியில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த தற்போது பெரிய ஏஐ நிறுவனங்களில் வேலை செய்யும் பொறியாளர்களை கண்டுபிடி எனக் கூறினால் அது விவரங்களை ஆய்வு செய்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பொறியாளர்கள் அவர்கள் தற்போது வேலை செய்யும் நிறுவனம் அவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் தந்துவிடும் என தெரிவித்திருக்கிறார்.
6 மாதமே கெடு: அதே போல எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டன்ட் வேலைகளையும் இனி ஏஐ பார்த்து கொள்ளும் என கூறியிருக்கிறார். ஏஐ உங்களுடைய ஜிமெயிலை மேலாண்மை செய்யும்,உங்களுக்கு என்னென்ன நிகழ்வுகள் வரும் வாரத்தில் இருக்கின்றன, நீங்கள் பதில் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்கள் என்னென்ன, நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் என்ன , அதற்கு எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வழங்கிவிடும் எனக் கூறுகிறார். எனவே எக்ஸிக்யூட்டிவ் அசிஸ்டன்ட் என்ற ஒரு வேலையே ஆறு மாதங்களில் முற்றிலும் அழிந்துவிடும் என தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications