தங்கக் கடத்தல், வைரக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற கடத்தல் சம்பவங்களைப் போல ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு ஒரு பெண் 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்களை கடத்த முயன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐபோன் 16 சீரிஸ் சென்ற மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயர்ரக ஸ்மார்ட்போன் ஆகும். ANI-இன் அறிக்கைகளின்படி, போலீசார் சில தகவல்களின் அடிப்படையில் அவர் ஏர்போர்ட்டை வந்தடைந்தவுடன் கைது செய்தனர். ஐபோன்களை ஒரு வேனிட்டி பேக்கில் புத்திசாலித்தனமாக மறைத்து வைத்து, டிஷ்யூ பேப்பரில் சுற்றி கொண்டு வந்துள்ளார்.

ஐபோன் 16 சீரிஸின் இந்திய விலையை வைத்து பார்த்தால், கைப்பற்றப்பட்ட ஐபோன்களின் சந்தை மதிப்பு மிக அதிகம். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 256ஜிபியுடன் ரூ.1,44,900 முதல் தொடங்குகிறது, அதே சமயம் 512ஜிபி மற்றும் 1டிபி மாடல்களின் விலை ரூ.1,64,900 மற்றும் ரூ.1,84,900-ஆக உள்ளது.
டெல்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள், வேனிட்டி பேக்கிற்குள் 26 ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை எடுத்துக்கொண்டு ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஒரு பெண் பயணியை தடுத்து நிறுத்தியது குறித்த செய்தியை அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்,
இந்த வழக்கில் மேலும் யார் யார் தொடர்புடையவர் என்பதை தெரிந்து கொள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர். சமீபத்திய ஐபோன் மாடல்களுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சட்டவிரோத இறக்குமதியைத் தடுக்க அதிகாரிகள் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர்.
ஆப்பிள் போன்களுக்கு இந்தியாவில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதுவும் ஆப்பிள் பிராண்டில் நியூ மாடல் மொபைல்கள் வெளியிடப்பட்டு விட்டால் மொபைல் பிரியர்களுக்கு அதை உடனே வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். அதற்கு ஏதுவாக தற்போது பல இ-காமர்ஸ் தளங்களிலும் அதிக அளவில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நடந்து கொண்டிருப்பதால் உயர் ரக ஸ்மார்ட்போன்களுக்கு சுமார் 35,000 ரூபாய் வரையிலான தள்ளுபடி கிடைக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications