வாழ்க்கை என்பது எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் நிறைந்தது. ஒரு சிலர் கடினமாக உழைத்தாலும் வெற்றிக் கனியை தட்ட முடியாத நிலையில் இருப்பார்கள். ஆனால் சிலர் எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டத்தின் மூலம் ஒரே இரவில் பணக்காரர் ஆகிவிடுவார்கள். அதிர்ஷ்டம் என்பது நமது கட்டுப்பாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. ஒரு சிலருக்கு இது எளிதில் கிடைக்கலாம். சிலருக்கு கிடைக்காமலும் போகலாம்.
அப்படிதான் ருமேனியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பெண்மணி ஒரு கல்லை வைத்திருந்தார். இந்த கல்லை அவ்வப்போது தனது வீட்டின் கதவு திறந்து மூடும் போது அசையாமல் இருக்க முட்டுக் கொடுக்க பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் இந்த கல் சாதாரண கல் அல்ல. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகை அம்பர் கல் என்பது அவருக்கே தெரியாமல் இருந்துள்ளது.

இந்த அரிய வகை அம்பர் கல்லை, அந்த பெண்மணி ஒரு ஓடையில் கண்டெடுத்துள்ளார். 3.5 கிலோகிராம் எடையுள்ள இந்த கல் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய அம்பர் கற்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நிபுணர்கள் இதன் மதிப்பு தோராயமாக 1.1 மில்லியன் டாலர் இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். அதாவது இந்திய மதிப்புக்கு இதன் விலை ரூ. 9,39,73,239 இருக்கும் என்று கணித்துள்ளனர்.
அம்பர் கற்களுக்கு பெயர் பெற்ற கோல்டி கிராமத்தில் தான் இந்த பெண்மணி வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கல்லை ஒரு ஓடையில் கண்டுபிடித்துள்ளார். அவர் தனது கதவை திறந்து மூட மட்டுமே இதைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் இந்தக் கல் ருமானைட் எனப்படும் அரிதான அம்பர் கல் என்பது அந்த பெண்மணிக்கு தெரியவே இல்லை.
இந்த வகை அம்பர் கற்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ருமானியாவில் 1920-களிலிருந்து அம்பர் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த பெண்மணியின் வீட்டில் நகை திருட கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அப்போதும் அந்த கல்லை அவர்கள் கவனிக்கவில்லை. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு வகை கல் என்று நினைத்துள்ளனர்.
1991-ஆம் ஆண்டு அந்தப் பெண்மணி இறந்த பிறகு அவருடைய உறவினர் ஒருவர், அந்தப் பெண்மணியின் சொத்துக்கெல்லாம் வாரிசாகப் பொறுப்பேற்றார். அது வரையில் அவருக்கும் இந்தக் கல்லின் உண்மைத் தன்மை குறித்து தெரியாது. அதன் பின்னர் அவற்றை ஆராய தொடங்கியுள்ளார். அப்போதுதான் கல்லின் உண்மையான தன்மை குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது. ஆய்வின் போது பல ஆண்டுகளாக கதவை முட்டுக் கொடுக்கப் பயன்படுத்தப்பட்ட அம்பர் கல் 38 முதல் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான புதைபடிவ பிசின் என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.
அம்பர் கல் என்பது மரங்களில் இருந்து வெளியாகும் பிசின். பல ஆண்டுகள் கழித்து இது கல்லாக மாறும். இது தங்க நிறம், சிவப்பு நிறம் என பல நிறங்களில் இருக்கும். நிபுணர்கள் இதை அரிய வகை அம்பர் என உறுதிப்படுத்தியதும், போலந்தின் கிரகோவிலுள்ள வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் இந்த அம்பரின் நம்பகத்தன்மையை சரிபார்த்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
தேசிய புதையலாக வகைப்படுத்தப்பட்ட இந்த நம்பர் இப்போது ருமானிய கலாச்சார பாரம்பரிய சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை யாரும் விற்கவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ முடியாது. 2022-ஆம் ஆண்டு முதல், இது புசாவ் மாகாண அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பார்வையாளர்கள் இந்த அம்பரை பார்வையிடலாம் மற்றும் அவற்றின் நீண்ட வரலாறு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications