கேரளத்தை சேர்ந்தவர் லட்சுமி ராஜ். தனது கணவர் அஜின் அபுதாபியில் வேலை பார்த்ததால் அவரும் அங்கு ஐந்து ஆண்டுகள் வசித்து வந்தார். அதன் பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். கேரளத்தில் அபுதாபி போல இன்ஸ்டன்ட் உணவுப் பொருட்கள் கிடைக்காததால் கடும் சிரமத்துக்கு ஆளானார்.
இதனிடையே கேரளத்தில் தயாரிக்கப்படும் உணவுகளில் பெரும்பாலும் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் , தேங்காய் துருவலைப பயன்படுத்துவதை பார்த்தார். இதற்காக ஒவ்வொரு முறையும் தேங்காயை பாரம்பரிய முறையில் துருவுவது பெரிய கஷ்டமாக இருந்தது லட்சுமிக்கு.

இதைத் தொடர்ந்து அவர் 2016 ஆம் ஆண்டில் ஈஸி அன் பிரஷ் என்ற உணவுத் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்தார். இதற்காக அவர் வங்கியில் ரூ.5 லட்சம் கடனாக வாங்கி தொழிலை தொடங்கினார். தொழிலுக்கு வேண்டிய தேங்காய்களை உள்ளூர் விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கொள்முதல் செய்தார்.
இப்போது அவரது தயாரிப்புகளை கேரள மாநிலம் முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்களுக்கு சப்ளை செய்கிறார் லட்சுமி. 100 கிராம் தேங்காய் துருவலை ரூ.33க்கும் 200 தேங்காய் துருவலை ரூ.46க்கும் விற்கிறார். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தேங்காய் துருவல் 5 நாட்களுக்கு கெட்டுப் போகாது என்கிறார் லட்சுமி.
தேங்காய் துருவல் தவிர அவர் தேங்காய் சட்னி பவுடர், வறுத்தரைச்ச சிக்கன் மசாலா பவுடர், வெர்ஜின் தேங்காய் எண்ணெய், உறையவைக்கப்பட்ட தேங்காய் சில், தீயல் மசாலா ஆகியவற்றையும் தயாரித்து லட்சுமி விற்கிறார்.
எனது தயாரிப்புகளின் விற்பனை மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேலாக சம்பாதிக்கிறேன். இந்த வியாபாரம் நன்றாக நடைபெறுவதால் புதிது புதிதாக தயாரிப்புகளை உருவாக்கி விற்க திட்டமிட்டுள்ளேன் என்று லட்சுமி கூறுகிறார். இல்லத்தரசியாக இருந்த லட்சுமி தனது கணவர் ஆதரவுடன் தெம்பு பெற்று இப்போது ஒரு சாதனை பெண் தொழிலதிபராக ஆகிவிட்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாடான அபுதாபியில் ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த லட்சுமியின் கனவு அவரது சொந்த ஊரில் நனவாகியதில் மிகுந்த பெருமையாக உள்ளது.
Story written by: Jayachandran
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications