கார்ப்பரேட் வேலையை தூக்கி போட்டவருக்கு கோடி கணக்கில் வருமானம்.. அப்படி என்ன தொழில்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நின்று நிதானமாக ஒருவேளை சாப்பிட கூட நேரமிருப்பதில்லை. மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தாலும், மாத கடைசியில் 100 - 200 ரூபாய்கே கஷ்டப்படும் நிலை இருக்கும்.

அந்த மாதிரியான சமயங்களில் இது என்னடா வாழ்க்கை என எண்ணத் தோன்றும். அப்படியான காலகட்டங்களில் ஏதேனும் சொந்த தொழில் செய்ய வேண்டும். அதனையும் மனதிற்கு பிடித்தமானதாக செய்ய வேண்டும்.

ஓரளவு வருமானமும் பெறவேண்டும். நம்மை போல கஷ்டப்படுபவர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என பலரும் நினைப்போம். ஆனால் அதனை எத்தனை பேர் செயல்படுத்துகிறோம் என கேட்டால் அது கேள்விக்குறி தான்.

ரூ.24 லட்சம் சம்பளத்தை தூக்கி போட்ட உதவி பேராசிரியர்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க! ரூ.24 லட்சம் சம்பளத்தை தூக்கி போட்ட உதவி பேராசிரியர்.. காரணத்த கேட்டா அசந்துருவீங்க!

மாங்க் & மெய் தொடக்கம்

மாங்க் & மெய் தொடக்கம்

இப்படி மாதம் முழுக்க ஓடியாடி வேலை செய்த பெண் ஒருவர், சொந்தமாக தொழில் செய்து, அதன் மூலம் கோடிக் கணக்கில் வருமானமும் ஈட்டி வருகின்றார். அவர் அப்படி என்ன செய்கின்றார். எப்படி இது சாத்தியம்? வாருங்கள் பார்க்கலாம்.

தனது கார்ப்பரேட் வேலையினை விடுத்து பெண் தொழில்முனைவோராக, சோனியா ஆனந்த் ஓடிசாவின் நக்சல்களால் பாதிப்பட்ட பகுதியில் மாங்க் & மெய் - என்ற ஸ்டார்ட் அப்பினை 2018ல் தொடங்கினார்.

கைவினைஞர்களின் கைவண்ணம்

கைவினைஞர்களின் கைவண்ணம்

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வருமானம் கோடி ரூபாய்க்கும் மேல் எனலாம். இந்த மாங்க் & மெய் ஷோரூமில் ஓடிசாவின் கிராமப்புற பகுதிகளில் வாழும் பழங்குடி இன பெண்கள் மற்றும் கைவினைஞர்களின் கைவண்ணத்தினை காண்பிக்கும் விதமாக ஆரம்பமானது.

எத்தனை கோடி வருவாய்?
 

எத்தனை கோடி வருவாய்?

ஒன்றரை தசாப்தத்திற்கு மேலாக கார்ப்பரேட் வேலையில் இருந்து வந்த சோனியா, கிராமப்புற கைவினைகளுடன் இணைந்து பணியாற்றவும், இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் முடிவு செய்த நிலையில் உருவானது தான் மாங்க் & மெய். இன்று மாதத்திற்கு சுமார் 1000 ஆர்டர்களை பெற்று வருகின்றார். இவரின் வருவாய் சுமார் 7.5 கோடி ரூபாயாகும்.

பாதிக்கப்பட்ட பெண்கள்

பாதிக்கப்பட்ட பெண்கள்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களுடன் இணைந்து பணியாற்றுவது, அவர்களும் உதவிகரமாக இருந்து வருகின்றது. இன்று ஓடிசாவில் இருந்து வெளியூருக்கு வேலை தேடிச் சென்றவர்கள் கூட, இங்கு தையல் பயிற்சி பெற்று வேலை செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் எதிர்ப்பு

ஆரம்பத்தில் எதிர்ப்பு

பொதுவாக எல்லா குடும்பத்திலும் இருந்ததைபோலவே சோனியாவும் சொந்த தொழில் செய்ய நினைத்தபோது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்ததாகவும், சோனியா விரைவில் பங்குதாரராக மாறவிருக்கும் நிலையில், ஏன் இப்படி ஒரு முடிவு என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். போர்டு ரூமில் பெரிய பெரிய ஒப்பந்தங்களை கையாள வேண்டிய பெண், ஊசி நூலை எடுத்துக் கொண்டு இது தான் எனது தொழில் கூறினால் யார் தான் ஏற்றுக் கொள்வார்கள்.

உற்பத்தி தொடக்கம்

உற்பத்தி தொடக்கம்

எனினும் ஒரு வழியாக பல எதிர்பார்ப்புகளையும் தாண்டி புவனேஷ்வரின் புற நகர் பகுதியில் அமைக்கப்பட்ட 100 தையல் இயந்திரங்களுடன் மாங்க் & மெய் செயல்பாடுகளை தொடங்கியது. ஆரம்பத்தில் 30 கைவிணைஞர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது சுமார் 91 பெண்கள் பணிபுரிகின்றனர். ஆரம்பத்தில் கார்ப்பரேட்களுக்கு சீருடைகளை தைத்துக் கொடுத்தோம்.

தடைகளை உடைத்து சாதனை

தடைகளை உடைத்து சாதனை

ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் யாருடையை உதவியும் இல்லாமலே செயல்பட்டு வந்தோம். எங்களுக்கு நாங்களே உதவிகரமாக இருந்தோம். இது எங்கள் ஒவ்வொருவருக்கும் பெரும் வெற்றியாக இருந்தது.

2019ல் பனி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வணிகத்தினை மீண்டும் சீரமைத்தோம். எங்கள் குழுவுடன் செயல்பட்டோம். மீண்டும் புதிய அவதாரம் எடுத்தோம். பல புதிய மாடல்களை அறிமுகம் செய்தோம். இது மேற்கோண்டு எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இன்று எங்கள் வணிகத்தில் நாங்கள் சிறந்து வழங்குகிறோம் என்கிறார் சோனியா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Woman founded startup with revenue in crores : monk & mei

Sonia Anand, who left her corporate job and became a woman entrepreneur, launched a start-up called Monk & Mei in the Naxal-hit area of Odisha.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X