ஒரு காதலன் தனது காதலியை ஏமாற்றி விட்டால் காதலி, காதலனை பழிவாங்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளார் என்பது குறித்த செய்திகள் பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
அந்த வகையில் குயின்ஸ்லாந்து நாட்டில் உள்ள நகரம் ஒன்றில் காதலன் ஒருவனால் ஏமாற்றப்பட்ட காதலி, பிரபல பத்திரிகை ஒன்றில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விளம்பரத்திற்கு காதலனின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலனின் துரோகம்
குயின்ஸ்லாந்து நாட்டில் உள்ள மேக்கே என்ற நகரில் ஸ்டீவ்- ஜென்னி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக இருந்தனர். இந்த நிலையில் திடீரென தனது காதலி ஜென்னியை ஸ்டீவ் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜென்னி மற்ற பெண்களை போல் மூலையில் முடங்கி கிடக்காமல் தனது காதலனின் துரோகத்தை ஊருக்கு அமல்படுத்த முடிவு செய்தார்.
முழுபக்க விளம்பரம்
இதனை அடுத்து ஜென்னி உள்ளூரில் வெளிவரும் Mackay and Whitsunday Life என்ற செய்தித்தாளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார். அதில் அன்புள்ள ஸ்டீல் என்று ஆரம்பித்து நீ என்னுடன் மகிழ்ச்சியாக ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான், ஆனால் இப்போது நீ ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை இந்த முழு நகரமும் அறிந்து கொண்டது' என அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் கீழே பின்குறிப்பில், இந்த விளம்பரத்திற்காக காதலனின் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்
Mackay and Whitsunday Life என்ற பத்திரிகையின் நான்காவது பக்கத்தில் இந்த முழுபக்க விளம்பரம் வந்ததை அடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அந்த ஸ்டீவ்? ஏமாற்றப்பட்ட ஜென்னி யார்? என பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்தனர்.
செய்தித்தாள் நிறுவனம் விளக்கம்
இதுகுறித்து செய்தித்தாள் நிறுவனம் தனது பேஸ்புக்கில் விளக்கத்தை அளித்துள்ளது. அதில் செய்தித்தாள் விளம்பரத்தில் கூறியபடி எந்தவித கிரெடிட் கார்டில் இருந்தும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் விளம்பரம் கொடுத்த ஜென்னி குறித்த விவரங்களை தெரிவிக்க முடியாது என்றும், அதேபோல் விளம்பரத்தில் உள்ள ஸ்டீவ் யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் ஆனால் அவர் மோசமானவர் என்று விளம்பரத்திலிருந்து தெரியவந்ததாகவும் பதிவு செய்துள்ளது.
காதலனின் கிரெடிட் கார்டு
மேலும் ஜென்னி பற்றிய விபரங்களை பலர் செய்தித்தாள் நிறுவனத்தில் கேட்டபோதிலும் ஜென்னி குறித்த எந்த விவரத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்றும் ஆனால் அவர் குறிப்பிட்டபடி அவருடைய காதலனின் கிரெடிட் கார்டு மூலம் நாங்கள் பணம் வசூலிக்கவில்லை என்பதை மட்டும் தெளிவு படுத்துகிறோம் என்று கூறியுள்ளது.
நெட்டிசன்கள் பாராட்டு
ஜென்னி தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க எடுத்த இந்த வித்தியாசமான முயற்சி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பலர் ஜென்னியின் துணிச்சலான முடிவை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒரு சிலர் இது ஒரு முட்டாள்தனமான அணுகுமுறை என்றும் விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications