இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியை திருமணம் செய்துகொள்வதற்காக பிரபல தொழில் அதிபர் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் ஜரூராகத் தயாராகி வருகிறார்.
குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி குடும்பம் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்டின் திருமணத்துக்கு முந்தைய வைபோகங்களை மூன்று நாட்களுக்கு வெகு சிறப்பாக நடத்தியது. மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற்றது.

இதில் உலகெங்கிலும் இருந்து பெரும் தொழிலதிபர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். விருந்தினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக மகிழ்ச்சி அடைந்தனர். ஆனந்த் அம்பானியும் ராதிகா மெர்ச்சன்ட்டும் ஏகக் குஷியில் இருந்தனர்.
ராதிகாவின் அசரவைக்கும் தோற்றம் இந்த விழா சமயத்தின்போது தென்பட்டது. அவர் பார்வையாளர்கள் அனைவரையும் தனது எழில்மிகுந்த அழகால் கவர்ந்தார். ஆன்லைனில் இந்த நிகழ்ச்சிகளின் விடியோக்கள் அனைத்தும் வைரல் ஆகின.

அண்மையில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட விடியோ ஒன்றில் ராதிகா போன்ற தோற்றத்தில் இருந்த பெண் ஓருவர் இடம் பெற்றிருந்தார். இந்த விடியோவை முதலில் பார்த்தவர்கள் எல்லாரும் அந்தப் பெண்ணை ராதிகா மெர்ச்சன்ட் என்றே நினைத்து விட்டனர். அந்தப் பெண்ணின் பெயர் சஞ்சயா கேத்ரபால்.
அந்தப் பதிவில் இடம்பெற்ற சஞ்சயா தனது திருமணக் கோலத்தில் இருந்தார். பிங்க் நிற சேலை அணிந்து அதற்கு எடுப்பாக நெக்லெஸ், தோடுகள், நகைகளை அணிந்திருந்தார். சஞ்சயாவின் சிகையலங்காரம் மிகவும் எடுப்பாக இருந்தது. தனது தோற்றத்துக்கு ஏற்றபடி சிறப்பான மேக்கப்பை போட்டிருந்தார்.

சஞ்சயாவுக்கும் ராதிகாவுக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை பலர் சுட்டிக்காட்டி பதிவிட்டனர். சமூக வலைதளத்தில் அவரது வீடியோ வெளியான சிறிது நேரத்தில் கருத்துகள் பெருக்கெடுத்து ஓடியது. ராதிகாவையும் சஞ்சயாவையும் ஒப்பிட்டு ஏராளமானவர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

ஒரு பயனர் எழுதினார், "ஏக் தம் ராதிகா லகே சே" (அவர் ராதிகாவைப் போலவே இருக்கிறார்), மற்றொருவர், "ராதிகா மெர்ச்சன்ட் போல இருக்க வேண்டும்- ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, ஏக் டம் மேரே ஜெய்சி லகே சே" (ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, அவள் என்னைப் போலவே இருக்கிறாள்) மற்றொருவர், "ஏக் பாரி தோ யே மிஜ்ஜே மோதா பாய் கி சோட்டி பஹு லகி' (அவர் 'மோட்டா பாய்' - முகேஷ் அம்பானியின் - 'சோட்டி பாஹு' போல் இருக்கிறார்) என்று எழுதினார்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications