2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வருகை தந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பாஜக அரசின் 2024-ம் ஆண்டுத் தேர்தலுக்கு முந்தைய முழுமையான இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வரலாற்று நிகழ்வு
ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் நிதியமைச்சர், பெண் குடியரசு தலைவரிடம் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காகச் சமர்ப்பித்துள்ளார்.
திரௌபதி முர்மு - நிர்மலா சீதாராமன்
இது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது, இந்தியாவில் இதுவரை இப்படியொரு நிகழ்வு நடந்தது இல்லை. மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிஜிட்டல் பட்ஜெட்
பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அதாவது Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோனா தொற்றுக் காரணமாக Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்பட்டது, இந்த ஆண்டும் தொடரப்படுகிறது.
பட்ஜெட் குழு
இந்த நிலையில் பட்ஜெட் 2023 அறிக்கையைத் தயாரிப்புக் குழுவில் யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமா. வாங்க பார்ப்போம்.
பட்ஜெட் ஏ டீம்
டிவி சோமநாதன் இவர் மத்திய நிதி மற்றும் செலவின துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா இவர் மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஆவார், அனந்த நாகேஸ்வரன் இவர் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆவார், துஹின் காந்தா பாண்டே இவர் மத்திய முதலீட்டுத் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (DIPAM) துறையின் செயலாளர் ஆவார், அஜய் சேத் இவர் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் ஆவார், விவேக் ஜோஷி இவர் நிதி சேவைகள் துறையின் செயலாளர் ஆவார்.
பகவத் கிஷன்ராவ் கராத்
மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் படத்துக்குப் பூஜை செய்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராத். இதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராத் நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வந்தார்.


Click it and Unblock the Notifications