நம் நாட்டில் பலர் ஒரு மாதத்திற்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்து 10,000 ரூபாயை சம்பளமாகப் பெற்று வருகின்றனர். ஆனால் வெறும் 3 மணி நேரம் வேலை செய்ததற்காக ரூ.4.4 லட்சத்தை சம்பளமாகப் பெற்ற ஒரு பெண் தனது X பக்கத்தில் தான் வாங்கிய சம்பளம் குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ஸ்வேதா குக்ரேஜா என்ற பெண் தனது வங்கி கணக்குக்கு ரூ.4.4 லட்ச ரூபாய் சம்பளமாக கிரெடிட் ஆன ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்து, இந்த மாதம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சுமார் 4,40,000 ரூபாய் ($5,200) பெற்றேன். மேலும் என் வாடிக்கையாளருடைய சமூக வலைதளத்திற்காக 3 மணிநேரம் மட்டுமே வேலை செய்தேன். இது போன்ற நாட்கள் வேலையை மிகவும் திருப்திகரமாக ஆக்குகின்றன என்று எழுதியிருந்தார்.

அவருடைய போஸ்ட் வெகு விரைவில் பலராலும் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக 7,70,000 வீயூஸுகளைப் பெற்றுள்ளது. பலரும் 3 மணி நேரம் வேலைக்கு அதிக கட்டணம் வழங்கியது குறித்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அவர் என்னதான் வேலை செய்கிறார்? அவருடைய நிபுணத்துவம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக கமெண்ட் செய்திருந்தனர்.
"3 மணிநேரம் வேலை செய்தததை நீங்கள் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். இதை கேட்கும் வாடிக்கையாளர் உங்களுடைய பதிவு குறித்து மகிழ்ச்சி அடைய மாட்டார்", என்று ஒரு பயனர் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ஸ்வேதா குக்ரேஜா நிபுணத்துவத்திற்க்காக மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.. நேரத்திற்காக அல்ல! ஒருவருடைய பணிக்கான கட்டணம் அவருடைய நிபுணத்துவத்தை பொறுத்தது.

பல வருட அனுபவத்திற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் நிபுணத்துவத்திற்காக பணம் செலுத்துகிறார்கள். அவர்கள் நேரத்தை பொறுத்து வேலைக்கு பணம் செலுத்த விரும்பினால் அவர்கள் இன்னும் மலிவாக கூட அந்த வேலையை முடிக்க முடியும் என்று எழுதியிருந்தார்.
இன்னொரு பயனர் "அடடா, இது ஃப்ரெஷர்களின் CTC-யை விட அதிகம்" என்று எழுதியிருந்தார்.
எந்த தொழில் செய்தாலும் சரி.. அதில் நிபுணத்துவம் பெறும் வரை தொடர்ந்து முயற்சித்து உங்கள் வேலையில் உங்களை மிஞ்ச யாரும் இல்லை என்ற நிலை வந்து விட்டால் வருமானம் ஒரு சாதாரண விஷயமாகிவிடும் என்பதற்கு ஸ்வேதா குக்ரேஜாவின் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications