இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சரான சுஜந்த் சர்மா, அனைத்து வட இந்தியர்களும் பெங்களூரை விட்டு வெளியேறினால், நகரம் வெறிச்சோடி போகும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் டிஜிட்டல் கிரியேட்டரான சுகந்த் ஷர்மா, "@thesugandhsharma" என்ற பக்கத்தில், 17,000-க்கும் மேற்பட்ட பாலோவர்ஸ்களை வைத்திருக்கிறார். இவர் வட இந்தியாவில் இருந்து வந்த நபர்கள் பெங்களூரில் இருந்து வெளியேறினால் பெங்களூரு நஷ்டத்தைச் சந்திக்கும் என்று கூறி பல ரீல்ஸ்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் ஒன்று வைரலாகி சுஜந்த் சர்மாவுக்கு பரவலான விமர்சனத்தை பெற்று தந்துள்ளது.
"நீங்கள் எல்லோரும் "you northies go back" என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள், நாங்கள் அனைவரும் பெங்களூருவை உண்மையிலேயே விட்டு வெளியேறினால், உங்கள் நகரம் வெறிச்சோடி போகும்" என்று சுஜந்த் சர்மா தனது ரீலில் கூறியுள்ளார். "முதலில், உங்கள் PGகள் காலியாகிவிடும், நீங்கள் இப்போது சம்பாதிக்கும் பணம் கிடைக்காது, கோரமங்கலாவில் உள்ள அனைத்து கிளப்புகளும் காலியாகிவிடும்.

இந்த கிளப்புகளில் பஞ்சாபி இசைக்கு நடனமாடுவதை நீங்கள் பார்க்கும் அழகான பெண்கள் எல்லாம் இனி இருக்க மாட்டார்கள். நீங்கள் பேசுவதற்கு முன் நினைத்துப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறினால், பெங்களூரு தன்னைச் சுற்றியுள்ள அனைத்து அழகையும் இழக்கும்" என்று கூறி வீடியோ பதிவிட்டிருந்தார். 3 நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு 11,000-த்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்கள் குவிந்துள்ளது. தற்போது அவர் பகிர்ந்த அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இவருடைய பதிவுக்கு பிரபலங்கள் மற்றும் பிற இன்ஸ்டாகிராம் பயனர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகரும் ராப்பருமான சந்தன் ஷெட்டி, நடிகைகள் சைத்ரா ஆச்சார் மற்றும் அனுபமா கவுடா, மற்றும் பிக் பாஸ் நட்சத்திரங்கள் ரூபேஷ் ராஜண்ணா மற்றும் தன்ராஜ் போன்றவர்களும் சுஜந்த் சர்மாவின் கருத்துக்கு தங்கள் மறுப்பைத் தெரிவித்தனர்.
வீடியோவுக்கு பதிலளித்த கோபமான இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் சர்மா நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
"சோதனைக்காக நீங்கள் உண்மையிலேயே வெளியேற முடியுமானால் வெளியேறுங்கள், பெங்களூரு எப்படி வெறிச்சோடி போகிறது என்று பார்ப்போம், நாங்கள் அந்த வெறுமை மற்றும் குறைந்த நடனக் கலைஞர்களைக் கொண்ட பப்புகளுடன் வாழ தயாராக இருக்கிறோம். மற்ற வட இந்தியர்களையும் மறந்துவிடுங்கள். நீங்கள் வெளியேறுங்கள் மேடம், இப்போதைக்கு அது போதும்!" என்று நடிகை சைத்ரா ஜே அச்சார் கருத்து தெரிவித்தார்.
"அப்படி நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. எல்லாவற்ற்றையும் விட உங்களுக்கு பெங்களூரு தேவை நீங்கள் பெங்களூரை விட்டு வெளியேறுவது எங்கள் ஊருக்கு எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நாங்கள் அனைவரும் பெங்களூரை விட்டு வெளியேற முடியாது. நீங்கள் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று கவுடா கருத்து தெரிவித்திருந்தார்.
தொழிலதிபரான யுடிஸ்டர் நாராயணன் கூறுகையில், "உண்மையில் வட இந்திய நண்பர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை. சில நபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஒரு தனிப்பட்ட அஜெண்டாவைக் கொண்டு, "வட இந்தியா vs பெங்களூரு" போன்ற கண்டன்டுகளை தொடர்ந்து வெளியிட்டு, தேவையற்ற வெறுப்பை பரப்பி வருவது போல தோன்றுகிறது.
சில சம்பவங்கள் நடந்திருக்கலாம், ஆனால் அது அனைவரையும் பாதித்திருக்காது. நாங்கள் அனைவரும் இங்கு ஒன்றாக தான் வாழ்கிறோம், நாங்கள் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மக்களை வரவேற்கிறோம், கன்னடத்தை கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறோம், அவர்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்குகிறோம்
"வெறுப்பை பரப்புவதற்கு பதிலாக, பெங்களூருவை சிறப்பானதாக ஆக்கும் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் கன்டென்ட்கள் எவ்வளவு அழகாக இருக்கும். தயவுசெய்து வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
இது போன்ற பல்வேறு கருத்துகளை பலரும் தெரிவித்த நிலையில் சர்மா பின்வாங்காமல் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த ரீல்களில் தான் பெங்களூரை விரும்புவதாகவும் வீடியோ நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் கூறினார். அதேபோல தான் செல்லும் நகரங்களின் கலாச்சாரத்தை உள்வாங்க முயற்சிப்பதாகவும், கன்னடத்தை கற்க விரும்புவதாகவும் தன்னம்பிக்கை வெறுப்பை பரப்புவதற்காக என்னுடைய ரீலை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஷர்மா கேட்டுக்கொண்டார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications