தமிழ்நாட்டில் பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான ஒரு திட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரேஷன் அட்டை அடிப்படையிலும் குடும்ப வருமானம் அடிப்படையில் தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் அரசு மாதந்தோறும் 1000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வரவு வைத்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு பெண்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற ஒரு திட்டமாக இருந்து வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என மொத்தம் ஆண்டுக்கு 12,000 ரூபாயை வழங்கி வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தங்களுக்கு தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக ஏராளமான பெண்கள் புலம்பி வந்தனர். எப்போது முதல் மீண்டும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற செய்திக்காக காத்திருந்தனர். இந்த நிலையில் தான் கடந்த வாரம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் வாயிலாக விடுபட்ட பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்.
இதன்படி தங்களுக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை எனக் கூறிவந்த பெண்கள், புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் , கடந்த முறை விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் இந்த முகாம்கள் வாயிலாக மீண்டும் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்யலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். வரும் 15ஆம் தேதியிலிருந்து உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்காக மகளிர் உற்சாகமாக ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சூழலில் திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது அந்த முகாமில் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் என்றார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலேயே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் செய்யும் பெண்களுக்கு அவர்களின் விண்ணப்பங்களின் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications