ஆப்கானிஸ்தான் நாட்டின் முந்தைய ஆட்சியின் போது இந்தியா, உட்பட உலக நாடுகள் உள்கட்டமைப்பு முதல் பல துறையில் முதலீடு செய்து அந்நாட்டின் அந்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவியது.
ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் வந்த பின்பு உலக நாடுகள் அனைத்தும் படிப்படியாக வெளியேறத் துவங்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் என அனைத்தும் தொடர்ந்து சரியத் துவங்கியது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களின் நல்லொழுக்கத்தைப் பல்வேறு கட்டுப்பாடுகள் மூலம் மேம்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் பெண்கள் பூங்கா-க்களுக்குச் செல்ல தாலிபான்கள் தடை விதித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. முதலில் ஆண்கள் துணை இல்லாமல் வெளியில் வரக் கூடாது எனச் சொன்ன தாலிபான் அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளைப் பெண்களுக்கு விதித்துள்ளது.
முகமது அகிஃப் முஹாஜிர்
நல்லொழுக்கத்தைப் பரப்புதல் மற்றும் தீமைகளைத் தடுத்தல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அகிஃப் முஹாஜிர் அந்நாட்டு ஊடகங்களிடம் பேசுகையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் இனி பூங்காக்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்.
முயற்சி தோல்வியாம்
கடந்த 14 அல்லது 15 மாதங்களாக, நாங்கள் ஷரியா (இஸ்லாமிய சட்டம்) மற்றும் எங்கள் கலாச்சாரத்தின் படி பெண்கள் பூங்காக்களுக்குச் செல்வதற்கான சூழலை வழங்க முயன்றோம் என்று முகமது அகிஃப் முஹாஜிர் இந்தப் பேட்டியில் கூறினார்.
ஹிஜாப் அணியும் கட்டுப்பாடு
துரதிர்ஷ்டவசமாக, பூங்காக்களின் உரிமையாளர்கள் நல்லொழுக்கத்தைப் பரப்புதல் மற்றும் தீமைகளைத் தடுத்தல் அமைச்சகத்துடன் ஒத்துழைக்கவில்லை. இதேபோல் பரிந்துரைக்கப்பட்ட படி பெண்கள் ஹிஜாப் அணிவதைக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் தற்போது பெண்கள் பூங்கா செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது என முகமது அகிஃப் முஹாஜிர் தெரிவித்தார்.
முகத்தை மறைக்க வேண்டும்
இதனால் இந்தத் தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு மே மாதம், தாலிபான்கள் பெண்கள் பொது இடங்களில் தங்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்று உத்தரவு அளித்தனர்.
புர்கா கட்டாயம்
முகத்தைச் சரியாக மூடும் முகமூடி உள்ளடக்கிய புர்கா அணிய வேண்டும் என்ற கட்டாய விதிமுறை தாலிபான் அரசு நடைமுறைப்படுத்தியது. ஒரு பெண் இந்த விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அவளுடைய தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினரை சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அரசாங்க வேலைகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தாலிபான்கள்
ஆகஸ்ட் 2021-ல் பல நாள் போராட்டத்திற்குப் பின்பு தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலைக் கைப்பற்றி ஒட்டுமொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
பொருளாதாரம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்த நாளில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விடப் பெண்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதிலும், நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். இது மட்டும் அல்லாமல் விதிகளை மீறுபவர்களுக்கு அதிகப்படியான தண்டனைச் சட்டங்களை அமல்படுத்தியுள்ளனர்.
பள்ளி மூடல்
உதாரணமாக, மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளை மூடிவிட்டு 12-18 வயதுடைய பெண்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பித்தது.
ஆண்கள் துணை
இதைத் தொடர்ந்து தாலிபான்கள் ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் வீட்டைவிட்டு தனியாக வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதிகளையும் கொண்டு வந்தனர். முந்தைய ஆட்சியில் கிடைத்த பெரும்பாலான சுதந்திரம் தாலிபான்கள் ஆட்சியில் பறிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications