ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது, இது மக்களுக்கு மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா டூ இந்தியா வரையில் தற்போது எலக்ட்ரிக் வாகனம் தான் எதிர்காலம் என கூறப்படும் வேளையில் இதை யார் அதிகம் வாங்குகிறார்கள்..? எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது யார்..? என்பது குறித்து முக்கியமான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
உலகளவில் எலக்ட்ரிக் வாகனக் (EV) விற்பனையில் பெண்கள் டிரைவர் சீட்டை பிடித்துள்ளனர் என்பதை கூகிள் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் இணைந்து வெளியிட்ட "திங்க் மொபிலிட்டி" என்ற ஆய்வறிக்கையின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.

இப்போது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கப்படுவதில் பெண்கள் 52% முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர் என்றும், பாரம்பரியமாக பயன்பாட்டில் இருக்கும் ICE வாகனக் கொள்முதல்களில் பெண்கள் 38% அதிகராத்தை மட்டுமே கொண்டு உள்ளனர் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இதை இன்னும் விளக்கமாக பார்த்தால் ஒரு வீட்டில் புதிதாக கார் வாங்க திட்டமிடுகிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். இதுக்குறித்து விவாதம் அல்லது ஆலோசனை வீட்டில் நடக்கும் போது பெண்களின் விருப்பம் முக்கிமயானதாக மாறுகிறது. அதாவது இந்தியாவில் பெண்கள் கடந்த காலத்தை விட தற்போது அதிகளவில் வேலைவாய்ப்பில் உள்ளனர், நிதியியல் சுதந்திரத்துடன் இருக்கிறார்கள்.
இதனால் வீட்டில் முக்கியமான நிதியியல் முடிவுகள் எடுக்கப்படும் போது பெண்களின் பங்கீடு அதிகமாகிறது. இதேவேளையில் இந்தியாவில் 2வது கார் வாங்கும் குடும்பங்களில் சுமார் 60-70 சதவீதம் பேர் எலக்ட்ரிக் கார்களை வாங்குகின்றனர். இந்த காரை பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இப்போ கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும், பெண்கள் ஏன் எலக்ட்ரிக் கார் விற்பனையில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும்.
எலக்ட்ரிக் கார் விற்பனையில் பெண்களின் செல்வாக்கு அதிகரிப்பது, ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. "திங்க் மொபிலிட்டி" அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள்:
பெண்களின் செல்வாக்கு: ICE வாகனங்களுக்கு 38% ஆக இருந்த பெண்களின் செல்வாக்கு EV கொள்முதல்களில் 52% ஆக உயர்ந்துள்ளது.
EV பரிசீலனை: கார் வாங்குபவர்களில் 36% பேர் EVகளை வாங்குகின்றனர், பரிசீலித்து வருகின்றனர். அதே நேரத்தில் இரண்டு சக்கர வாகன வாங்குபவர்களில் 30% பேரும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குகின்றனர்.
சந்தை பங்கு கணிப்புகள்: 2030 ஆம் ஆண்டில் 4 சக்கர வாகனங்களில் EV 15-17% சந்தைப் பங்கையும், 2 சக்கர வாகனங்களில் EV 35-40% பங்கையும் கைப்பற்றும் என்று அறிக்கை கணித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications