இந்தியாவில் உள்ள சொமேட்டோ, பேடிஎம், டெல்ஹிவரி, மாமா எர்த் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் சராசரி சம்பளம் அதே நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களை விட அதிகமாக உள்ளதாக அந்நிறுவனங்கள் வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்டெக் நிறுவனமான பேடிஎம்-இல் இந்த ஆண் பெண் ஊதியம் தொடர்பான வித்தியாசம் அதிக அளவில் உள்ளது. 2024-ஆம் நிதியாண்டில் பேடிஎம் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் சராசரி ஊதியம் ஆண்களைவிட 160 சதவீதம் அதிகமாக உள்ளது.
இருப்பினும் இந்த வித்தியாசம் நைக்கா நிறுவனத்தில் நேர்மாறாக உள்ளது. ஃபல்குனி நாயர் தலைமையிலான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஃபேஷன் நிறுவனமான நைக்காவில், பெண் ஊழியர்களின் சராசரி சம்பளம் ஆண்களை விட 27 சதவீதம் குறைவாக உள்ளது.

பிற நிறுவனங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சம்பளம் வாங்கினாலும் நைக்கா நிறுவனத்தில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதன்படி நைக்கா நிறுவனத்தில் ஒரு பெண் ஊழியர் இருந்தால் எண்ணிக்கைக்கு 17 ஆண் ஊழியர்கள் உள்ளனர்.
2024-ஆம் நிதி ஆண்டில் பல டெக் நிறுவனங்களின் சம்பளம் குறைந்துள்ளது. பட்டியலிடப்பட்ட டெக் நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கையில் இந்த விஷயம் வெளியானது. சொமேட்டோ நிறுவன ஊழியர்களின் சராசரி ஊதியம் 16.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெலிவரி மற்றும் நைக்கா ஊழியர்களின் சாராசரி ஊதியம் தேக்கமடைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. சராசரி ஊதியத்தில் பேடிஎம் 7 சதவீத உயர்வையும், மாமா எர்த் 20 சதவீத உயர்வையும் கண்டது.
பாலிசி பசாரின் உயர் அதிகாரிகளுக்கு ரூ. 201 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. இணை நிறுவனர் மற்றும் CEO யஷிஷ் தாஹியாவுக்கு ரூ.121 கோடி, இணை நிறுவனர் மற்றும் துணை தலைவர் அலோக் பன்சாலுக்கு ரூ. 53 கோடி, மற்றும் CFO-க்கு மன்தீப் மேத்தாவுக்கு ரூ. 6 கோடி வழங்கப்பட்டது. இந்த சம்பளம் 2022 முதல் 2023-ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ரூ. 345 கோடியை விட 42% குறைவு.
Delhivery-இன் உயர் அதிகாரிகளுக்கு ரூ. 66 கோடி முதல் ரூ. 4.7 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டது. அதன்படி இணை நிறுவனர் மற்றும் CEO சஹில் பாருவாவுக்கு ரூ. 66 கோடி, இணை நிறுவனர் மற்றும் CTO கபில் பாரதிக்கு ரூ. 50 கோடி மற்றும் இணை நிறுவனர் சுரஜ் சாஹரனுக்கு ரூ. 4.7 கோடி வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications