அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது தொடங்கி நடந்து வருகின்றது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறியிக்கையினை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த கூட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் பற்றி குடியரசுத் தலைவர் பேசி வருகின்றார்.
பெண்களின் பங்கு அதிகம்
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்களில் பெண்களுக்கு ஊக்கம் அளிக்க அரசின் நடவடிக்கைகளையும் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய உரையில் கிராமப்புற பொருளாதாரத்தினை மேம்படுத்துவதில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகின்றது. 2021 - 22ம் ஆண்டில் 28 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு 65,000 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2014 - 15ம் ஆண்டினை 4 மடங்கு அதிகம்.
பெண் ஆய்வாளர்கள் அதிகரிப்பு
மேலும் அரசின் கொள்கைகளாலும், ஊக்குவிப்பாலும் பல்வேறு காவல் துறைகளில், பெண் ஆய்வாளர்களின் எண்ணிக்கையானது கட்னத 2014வுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகரித்துள்ளது. மேலும் பெண்களின் உரிமையை மேம்படுத்தும் விதமாக தடை செய்யப்பட்ட முத்தலாக் சட்டம் பற்றியும் கூறியுள்ளார்.
பெண்களுக்கு உரிமை
பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது முன்னுரிமைகளில் ஒன்றாகும். அதேபோல ஏழை பெண்களை ஊக்குவிக்கும் வகையில் உஜ்வாலா திட்டம் வெற்றி கண்டுள்ளது. அதேபோல முத்ரா யோஜனா மூலம் பெண் தொழில் முனைவோர் வெற்றி கண்டுள்ளனர்.
சம உரிமை
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம உரிமை வழங்கும் வகையில், ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவினையும் அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் வெற்றி கண்டுள்ளதாக நாடளுமன்ற உரையில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications