மகளிர் விடியல் பயண திட்டத்தால் பெண்கள் எவ்வளவு சேமிக்கிறார்கள் தெரியுமா? – பட்ஜெட்டில் தகவல்

2025-26ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பெண்களுக்காக அரசு இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களை அவர் பட்டியலிட்டார். குறிப்பாக மகளிர் விடியல் பயண திட்டம் மூலம் மாதந்தோறும் பெண்கள் எவ்வளவு சேமிக்க முடிகிறது என்ற விவரங்களை அவர் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த உடனே மகளிர் விடியல் பயண திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி உள்ளூர்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் டிக்கெட் இன்றி இலவசமாக பயணம் செய்ய முடியும். இதனை தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் நடைமுறைப்படுத்த திட்டங்களில் மகளிர் விடியல் பயண திட்டமும் ஒன்று என கூறினார்.

மகளிர் விடியல் பயண திட்டத்தால் பெண்கள் எவ்வளவு சேமிக்கிறார்கள் தெரியுமா? – பட்ஜெட்டில் தகவல்

இந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைகின்றனர் என குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் தினமும் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் மகளிர் விடியல் பயண திட்டம் மூலம் மாதந்தோறும் சராசரியாக 888 ரூபாயை சேமிக்க முடிகிறது என்றார்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலில், மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம், இதுவரை ரூ.643.88 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசால் 2021ம் ஆண்டு மே மாதம் விடியல் பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கின்றனர். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் மகளிர் விடியல் பயண பேருந்துகளில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 7,495 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 126.53 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டிலும் மகளிர் விடியல் பயண திட்டத்திற்காக அரசு 3,600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இது தவிர 77 கோடி ரூபாயில் மேலும் 10 இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும், சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் 275 கோடியில் மாணவியர் விடுதிகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு என செயல்படுத்தப்படும் முக்கியமான திட்டங்களாக மகளிர் உரிமை தொகை திட்டமும், மகளிர் விடியல் பயண திட்டமும் பார்க்கப்படுகிறது. இவை ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்களாக கருதப்படுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+