பெண்கள் ஐபிஎல் 2023: 30 நிறுவனங்கள் போட்டி.. யாருக்கு கிடைக்கும் ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தன்மையை மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற பெருமை IPL-க்கு உள்ளது. இந்த நிலையில் தற்போது வளர்ந்து வரும் பெண்கள் கிரிக்கெட் அணிகளை ஐபிஎல் போட்டிகளிலும் கொண்டு வரும் முயற்சி துவங்கியுள்ளது.

 

ஐபிஎல் போட்டிகள் விளையாட்டைத் தாண்டி வர்த்தகம் அதைச் சார்ந்த வர்த்தகம் முக்கியமானதாகப் பார்க்கப்படும் நிலையில் பெண்கள் IPL போட்டிகளின் அணி உரிமையை வாங்க இந்தியாவின் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகிறது.

ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் ஒரு நிறுவனத்தின் பொருட்கள், சேவைகளைச் சந்தைப்படுத்த மிகவும் சிறந்த இடமாக இருக்கும் காரணத்தால் தற்போது பெண்கள் ஐபிஎல் போட்டிகளை டார்கெட் செய்ய உள்ளது கார்ப்பரேட் உலகம்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. ட்விட்டரில் மோதிக்கொண்ட நிறுவனங்கள்! இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. ட்விட்டரில் மோதிக்கொண்ட நிறுவனங்கள்!

பெண்கள் ஐபிஎல்

பெண்கள் ஐபிஎல்

விரைவில் துவங்க இருக்கும் மகளிருக்கான ஐபிஎல் போட்டிக்கான உரிமைகளை வாங்க 30க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகளிருக்கான ஐபிஎல் போட்டி 2023 ஆம் ஆண்டில் துவங்க உள்ளது. முதல் கட்டமாக ஐந்து அணிகள் சாம்பியன்ஷிப் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றன.

ஆண்கள் ஐபிஎல்

ஆண்கள் ஐபிஎல்

ஆண்களுக்கான ஐபிஎல் அணிகளின் உரிமையைப் பெற்றுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் தங்களது சொந்த வர்த்தகத்திலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி அதிகப்படியான லாபத்தைப் பெற்றது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய மதிப்புடைய ஒரு அணியை உருவாக்கிய பெருமையைப் பெற்றுள்ளது. இதே மேஜிக் பெண்கள் ஐபிஎல் போட்டிகளிலும் உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது.

டெண்டர் அழைப்பிதழ்
 

டெண்டர் அழைப்பிதழ்

தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் BCCI இன் டெண்டர் அழைப்பிதழ் (ITT) ஆவணத்தைக் கொடுத்து ஐந்து அணிகளுக்கான உரிமையைப் பெற போட்டிப்போட்டு வருகிறது. டெண்டரை வாங்குவது அணியை வாங்குவது கிடையாது, ஏல விண்ணப்பங்களைக் கொண்டு விண்ணப்பதாரரின் தகுதியை ஆய்வு செய்து ஏலம் வாயிலாகவே எடுக்க முடியும்.

ILT20 உரிமையாளர்கள்

ILT20 உரிமையாளர்கள்


ஆர்வமுள்ள நிறுவனங்களின் பட்டியலில் தற்போதுள்ள 10 ஐபிஎல் அணிகளின் அணி உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ILT20 உரிமையாளர்களான Gulf Giants (Adani Group) மற்றும் Sharah Warriors (Capri Global) ஆகியவற்றின் உரிமையாளர்களும் WIPL உரிமைகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். தவிர, ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனமான ஹல்திராம் ஐடிடியை வாங்கியுள்ளது.

10 பிரான்சைஸ்

10 பிரான்சைஸ்

தற்போது ஆண்களுக்கான IPL போட்டியில் இருக்கும் 10 பிரான்சைஸ் உரிமையாளர்கள், இண்டர்நேஷ்னல் லீக் டி20 பிரான்சைஸ் அணிகளான Gulf Gaints (இது அதானி குரூப் அணி), Sharah warriors ஆகியவற்றின் உரிமையாளர்களும் பெண்களுக்கான IPL அணி ஏலத்தில் பங்கு பெறுகின்றனர்.

30 நிறுவனங்கள்

30 நிறுவனங்கள்

இதைத் தாண்டி BCCI அமைப்பின் Invitation To Tender அறிக்கையை வாங்கிய நிறுவனங்கள் பட்டியிலில் ஸ்னாக்ஸ் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் Haldiram நிறுவனம், APL அப்போலோ, ஸ்ரீராம் குழுமம், நீலகிரி குழுமம், செட்டிநாடு சிமெண்ட், ஜேகே சிமெண்ட், AW கட்குரி குழுமம் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பங்களை வாங்கியுள்ளது.

BCCI அமைப்பு

BCCI அமைப்பு

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளரான GMR Sports மற்றும் JSW Sports ஆகியவையும் BCCI அமைப்பின் Invitation To Tender அறிக்கையைத் தனிப்பட்ட முறையில் வாங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஷாருக்கான், ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா

ஷாருக்கான், ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா

இதேபோல் தற்போது ஆண்களுக்கான ஐபிஎல் போட்டியில் இருக்கும் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ஜூஹி சாவ்லா மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரும் பெண்களுக்கான ஐபிஎல் போட்டியின் அணி உரிமைகளை வாங்கும் முயற்சியில் உள்ளனர். ஆனால் பாலிவுட்-ல் இருந்து புதிதாக யாரும் சேரவில்லை.

5 அணிகள்

5 அணிகள்

இந்த நிலையில் பெண்கள் ஐபிஎல் போட்டிகளின் 5 அணிகளை வாங்கும் நிறுவனங்கள் எது என்று தெரிந்துகொள்வதில் அனைத்து தரப்பினரும் பெரிய அளவிலான ஆர்வம் உள்ளது. இந்த முயற்சியின் மூலம் இந்திய பெண்கள் அணிக்கான அடுத்த வலிமையான தலைமுறையை உருவாக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: ipl ஐபிஎல்
English summary

Women IPL 2023: 3 Companies fighting to acquire franchises; Shah Rukh Khan, Preity Zinta in race

Women IPL 2023: 3 Companies fighting to acquire franchises; Shah Rukh Khan, Preity Zinta in race
Story first published: Saturday, January 21, 2023, 15:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X