தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவருமே ChatGPT-ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ChatGPT என்பது OpenAI நிறுவனம் உருவாக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருள் ஆகும். இது, பல தகவல்களை நமக்கு வழங்குகிறது. மேலும் கட்டுரைகள், கதை, கவிதைகள் எழுதவும் உதவுகிறது. இதனால், பல நிறுவனங்கள் ChatGPT-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது, அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண், தனது கிரெடிட் கார்டு கடனை $23,000 (தோராயமாக ₹19.6 லட்சம்)-ஐ குறைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். இதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். இந்தப் பெண்ணின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருந்த நிலையில், இவர் செயற்கை நுண்ணறிவை அணுகியுள்ளார். அதன்படி, ChatGPT வழங்கிய படிப்படியான ஆலோசனைகள், உத்திகள், கடன் ஒழுங்கமைப்பு திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அந்த பெண் தனது கடனை சுலபமாக செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதான ஜெனிஃபர் ஆலன், ஒரு ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர் ஆவார். இவர், அளித்துள்ள பேட்டியில், "நான் போதுமான அளவு சம்பாதிக்காமல் இல்லை. ஆனால், நிதி கல்வியறிவு எனக்கு ஒருபோதும் கற்பிக்கப்படவில்லை. இதுதான் என்னுடைய பிரச்சனைக்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார். எனக்கு நல்ல வருமானம் இருந்தும், கிரெடிட் கார்டு கடன் $23,000 (₹19.6 லட்சம்) வரை உயர்ந்துவிட்டது.
இதில் இருந்து வெளிவர ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவிடம் உதவி கேட்டுள்ளார். அதில், AI வழங்கிய வழிகாட்டுதலின் மூலம், செலவுகளைத் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அவர் தனது கடனை கட்டுப்படுத்தி வந்துள்ளார். மகள் பிறந்த பிறகு மருத்துவ செலவுகள், பெற்றோர் பராமரிப்பு செலவுகள் உயர்ந்ததால், அவரது நிதி நிலைமை மோசமடைந்துள்ளது. எனவே, இதனை சமாளிக்க அவர் கார்டுகள் மூலம் அதிக கடன் வாங்க ஆரம்பித்துள்ளார்.
"நாங்கள் ஆடம்பரமாக வாழவில்லை. வெறும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தோம். ஆனால், நான் கவனிக்காதபோது, கடன் அதிகமாகிவிட்டது" என ஜெனிஃபர் ஆலன் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். பின்னர், சாட் ஜிபிடி உதவியுடன் தேவையில்லாத செலவுகளை குறைப்பது, தேவையில்லாத ஓடிடி சந்தாக்களை ரத்து செய்வது, மறந்துவிட்ட கணக்குகளில் உள்ள பணத்தை மீட்பது போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு, அவர் தனது கிரெடிட் கார்டு கடன் தொகை குறைத்துள்ளார். ChatGPT வழங்கிய வழிகாட்டுதல் மூலம், நிதி பற்றி சிந்திக்கும் அவருடைய மனப்பாங்கும் மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாட் ஜிபிடி மூலம் செயலற்ற நிலையில் இருந்த ஒரு பரிவர்த்தனை கணக்கில் மட்டும் $10,000 (தோராயமாக ₹8.5 லட்சம்) இருந்துள்ளது. இது ஜெனிஃபருக்கே ஆச்சரியமாக இருந்தது. மற்றொரு நாளில், முறையான உணவுத் திட்டமிடல் மூலம் அவர் மாதந்தோறும் ₹50,000 வரை மளிகைச் செலவை குறைத்துள்ளார். இந்த செயல்பாடுகள் அனைத்தும் ChatGPT வழங்கிய தினசரி நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்தன. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மேற்கொண்ட 30 நாள் நிதி சவாலை முடித்த ஜெனிஃபர் ஆலன், $12,078.93 (தோராயமாக ₹10.3 லட்சம்) செலுத்தி, தனது மொத்த கிரெடிட் கார்டு கடனில் கிட்டத்தட்ட பாதியை குறைத்துவிட்டார். இந்த வெற்றியை அடுத்து மீதமுள்ள கடனைத் தீர்க்க, அவர் இப்போது இரண்டாவது 30 நாள் சவாலை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications