இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தில் பெண்களின் நிதி நலன் பற்றி பேசுவது முக்கியமாகும். சில காலமாக பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல முதலீடுகளிலும் பெண்களின் ஆர்வம் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது. தங்களின் நிதி எதிர்காலத்தையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பல பெண்கள் முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்த தொடங்கியிருந்தாலும், சிலர் இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இந்தப் பதிவில் பெண்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்கும் சில முதலீட்டு திட்டங்கள் பற்றி பார்ப்போம்.

தங்கம்: தங்கத்தில் முதலீடு செய்வது இந்தியாவில் உள்ள பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தங்க நகைகள், தங்க காயின்கள் என தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி வைக்கின்றனர். அதுவும் பணி புரியும் பெண்கள் தங்களுடைய சம்பளம் மொத்தமாக சேமிப்பாக வேண்டும் என்பதற்காக மாதம் 1 கிராம் தங்கம் வாங்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வதும் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): PPF அரசாங்கத்தால் வழங்கப்படும் முதலீட்டு திட்டம் ஆகும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த திட்டத்தை பயன்படுத்தி பலனடையலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். தற்போது இந்த திட்டத்திற்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1 வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பிற திட்டங்களை விட அதிக லாபம் தரக்கூடியவை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு சந்தையை ஆராய்வது முக்கியமாகும். இது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதால் உங்களுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே எந்த ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பும் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி மிகவும் பிரபலமான திட்டமாகும். இதில் வெறும் 250 ரூபாய் முதல் உங்களால் முதலீடு செய்ய முடியும். இதற்கு வருடாந்திர வருமானமாக 12 சதவீதம் வழங்கப்படுகிறது. இதுவும் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து மாறுபடலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம்: இது ஒருவர் ஓய்வுக்கு பிறகு தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் அரசாங்கத் திட்டமாகும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதில் செய்ய முடியும். இந்த திட்டத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் வரிச்சலுகைகளும் கிடைக்கிறது. கூடுதலாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து ஓய்வு பெற்ற பின் மொத்த கார்பசில் ஒரு பகுதியை மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையை ஓய்வூதியமாக மாற்றிப் பெறலாம்.
பிக்சட் டெபாசிட்: பிக்சட் டெபாசிட் முதலீட்டையும் நீங்கள் தேர்வு செய்யலாம். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றது. முதலீடு என்று சொன்னாலே உடனடியாக பலருக்கும் நினைவுக்கு வருவது FD முதலீடு தான். பாதுகாப்பான வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெறலாம். 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு காலகட்டங்களுடன் FD திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில் உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications