பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய விளையாட்டுத் துறையை மொத்தமாக மாற்றிய ஐபிஎல் போட்டிகள் விளையாட்டைத் தாண்டி அதைச் சார்ந்த வர்த்தகம் முக்கியமானதாக மாறியுள்ளது.

 

இந்த நிலையில் ஆண்களுக்கான ஐபிஎல் போட்டிகள் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், தற்போது பெண்களுக்கான IPL போட்டிகளின் அணி உரிமையை விற்கும் பணியில் இந்திய கிரிக்கெட் வாரியம் இறங்கியது.

இந்த ஏலத்தில் ஆண்கள் ஐபிஎல் போட்டியை காட்டிலும் பெண்கள் ஐபிஎல் அணியின் உரிமை அதிகத் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

மீடியா ரைட்ஸ்

மீடியா ரைட்ஸ்

முதல் பெண்கள் ஐபிஎல் போட்டிக்கான மீடியா ரைட்ஸ் ஏற்கனவே முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் வயாகாம் 18-க்கு 951 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 அணிகளுக்கான உரிமையை விற்பனை செய்யும் பிட்டிங் பணிகள் துவங்கியது.

Women's Premier League போட்டி

Women's Premier League போட்டி

Women's Premier League எனப் பெயருடன் துவங்கும் பெண்கள் ஐபிஎல் போட்டியில் இடம்பெறும் 5 அணிகளைச் சுமார் 4669.99 கோடி ரூபாய்க்குப் பிட்டிங் செய்து 5 முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது எனப் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

5 நிறுவனங்கள்
 

5 நிறுவனங்கள்

ஏலத்தில் வெற்றிபெற்ற 5 நிறுவனங்கள் பட்டியல் மற்றும் அதன் ஏல தொகை

 

அதானி ஸ்போர்ட்ஸ்லைன் ப்ரைவேட் லிமிடெட் - 1289 கோடி ரூபாய்
இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் - 912.99 கோடி ரூபாய்
ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் - 901 கோடி ரூபாய்
JSW GMR கிரிக்கெட் ப்ரைவேட் லிமிடெட் - 810 கோடி ரூபாய்
கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் ப்ரைவேட் லிமிடெட் - 757 கோடி ரூபாய்

ஆண்கள் ஐபிஎல் - பெண்கள் ஐபிஎல்

ஆண்கள் ஐபிஎல் - பெண்கள் ஐபிஎல்

இதுமட்டும் அல்லாமல் ஆண்களுக்கு ஐபிஎல் முதல் சீசன் 2008 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. ஆண்கள் ஐபிஎல் அணிகளுக்கான உரிமை தொகையைக் காட்டிலும் பெண்கள் ஐபிஎல் அணிகளுக்கான உரிமை அதிகத் தொகைக்குப் பிட்டிங் செய்யப்பட்டு உள்ளது எனவும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

30 நிறுவனங்கள் போட்டி

30 நிறுவனங்கள் போட்டி

மகளிருக்கான ஐபிஎல் போட்டிக்கான உரிமைகளை வாங்க 30க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், டாப் 5 தொகையைப் பிட்டிங் செய்யும் தரப்புக்கு தான் 5 அணிகளுக்கான உரிமை வழங்கப்பட உள்ளது. முதல் சீசனில் ஐந்து அணிகள் சாம்பியன்ஷிப் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றன.

ஜெய் ஷா

ஜெய் ஷா

இந்த ஏலம் மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு புரட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விளையாட்டு சகோதரத்துவத்திற்கும் ஒரு மாறுப்பட்ட பயணத்திற்கு வழி வகுக்கிறது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

மாற்றம்

மாற்றம்

 

#WPL ஆனது பெண்கள் கிரிக்கெட்டில் தேவையான சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் மற்றும் ஒவ்வொரு பங்குதாரருக்கும் பயனளிக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய எகோசிஸ்டத்தை உறுதி செய்யும் என டிவிட்டர் பதிவில் ஜெய் ஷா தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: women ipl ipl ஐபிஎல்
English summary

Women's Premier League BCCI announces 5 successful bidders bid valuation is 4669.99 crore

Women's Premier League BCCI announces 5 successful bidders bid valuation is 4669.99 crore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X